மும்பை, ஜன. 30: மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களை, இந்தியப் பேனாநண்பர் பேரவைத் தலைவர் மா.கருண், அறங்காவலர் பா.மலர்விழி, செயற்குழு உறுப்பினர் து.கோயில்ராஜா, உறுப்பினர் தா.அ. விஜயகுமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அவர்களை ஆளுநர் அவர்கள் அன்புடன் வரவேற்று, இந்தியப் பேனாநண்பர் பேரவையின் துவக்கம், வளர்ச்சி மற்றும் சமூக நலப் பணிகள் குறித்துக் கேட்டறிந்து வாழ்த்து தெரிவித்தார். மும்பையில் தமிழ்நாடு இல்லம் விரைவில் அமைந்திட ஆளுநர் அவர்களின் கவனம் செலுத்த வேண்டுமென இந்தியப் பேனாநண்பர் பேரவை சார்பாக அதன் தலைவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து மும்பையில் தமிழ்நாடு இல்லம் அமைய துணையாயிருப்பேன் என்று மகிழ்வுடன் தெரிவித்தார். ஆளுநர் அவர்களுக்கு இந்தியப் பேனாநண்பர் பேரவை சார்பாக பேரவைத் தலைவர் மா.கருண் அவர்கள் பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை பரிசாக அளித்தார்.































































