பெங்களூரு, ஆக. 16: சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹன்னூரில் வனத்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்த 3 தமிழர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தாய்மொழி கூட்டமைப்பு தலைவர் எஸ்டி குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாய்மொழி கூட்டமைப்பு தலைவர் முனைவர் எஸ்டி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனத்துறையினரால், சுடப்பட்டு உயிர் இழந்த தமிழர் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை மற்றும் அரசு பணி வழங்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்திருப்பதை ரூ. 10 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.






























































