தென்காசி, ஜூன் 8: தென்காசி திருவள்ளுவர் கழகம் சார்பில் பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் எஸ்.டி.குமாருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நூற்றாண்டை தொடும் தென்காசி திருவள்ளுவர் கழகம் சார்பில் பெங்களூர் திருவள்ளூர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் எஸ்.டி. குமார் அவர்களுக்கு வரவேற்பு அளித்து, ஏழாவது உலக திருக்குறள் மாநாட்டின் தகவல் அறிக்கை வெளியிட்டு, பெங்களூரில் ஜூலை 5 ஆம் தேதி புனிதர் ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 7வது உலகத் திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தனர்.































































