பெங்களூரு, செப். 15: இன்றைக்கும் நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர் அறிஞர் அண்ணா என்று கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் தெரிவித்தார்.
கர்நாடக மாநில திமுக சார்பில் அமைப்பாளர் ந.ராமசாமி தலைமையில் திமுக தலைமை அலுவலகம் கலைஞரகம், தளபதி மு க ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில், கிளைச் செயலாளர் லோகநாதன் திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
அண்ணா திருவுருவச் சிலைக்கு முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் வி எஸ் மணி, கே எ சுந்தரேசன் ஆகியோர் மாலை அணிவித்தனர். கலைஞர் மு கருணாநிதி சிலைக்கு போர் முரசு கதிரவன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜசேகர், முருகானந்தம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
கழகத்தின் ஐம்பெரும் திருவுருவப்பட படங்களை கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தில் தலைவர் முத்துமணி நன்னன் கழக ஐம்பெரும் தலைவர்களின் திருவுருவப்படங்களை திறந்து வைத்தார். மகளிர் அணி அமைப்பாளர் சற்குணா, முருகமணி செல்வம் மகளிர் துணை அமைப்பாளர் மங்கம்மா,
தொமுசா பேரவை பொன்னம்பலம், ஏழுமலை, கரிகாலன், ஜி நாகராஜ், பன்னீர்செல்வம், பெமல் கேசவன், மடிவாளா செல்வம், ஜான் ரபேல், ஹரிஹர புத்திரன், சந்திரமௌலி, ரவி, குமரேசன் டாக்டர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய முத்துமணி இவ்வாறு கூறினார். மேலும் அறிஞர் அண்ணா இறப்பதற்கு முன்பு பேசிய ஒரு கூட்டத்தில், மாநிலத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓர் ஆண்டில் என்ன சாதித்து விட்டனர் என்று பலரும் கேட்கின்றனர். தந்தை பெரியாரின் தலைமையில் தோன்றிய பகுத்தறி திருமணங்களை சட்டவடிவமாக்கி உள்ளோம். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் சூட்டி உள்ளோம்.
இந்தி ஒழி ஆதிக்கத்தை எதிர்க்கும் நோக்கில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையாக அறிவித்து அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனை என்றைக்காவது மாற்றலாம் என்று மத்தியில் ஆட்சியில் உள்ளவர் நினைத்தால், மாநிலத்தில் உள்ள மக்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற அச்சம் ஏற்படும். அந்த அச்சம் நிலைத்திருக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதான் ஆண்டு கொண்டிருக்கிறான் என்று சொன்னார்.
அண்ணா அவர்கள் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 1969 இல் அண்ணா மறைந்து போனார். என்றாலும் இன்றைக்கும் தமிழ்நாட்டை மட்டுமல்லாது நாட்டையும் அண்ணாதான் ஆண்டு கொண்டிருக்கிறார். இன்றைக்கும் நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கு அண்ணா அச்சத்தை ஊட்டிக் கொண்டிருக்கிறார்.
அண்ணா போன்ற ஆளுமையை இந்த தமிழ்ச் சமுதாயம் கொண்டாடி வருகிறது. இது போதாது. அண்ணா போன்ற தலைவர் இனி எப்போதும் பிறக்கப் போவதில்லை. பெரியாரின் கொள்கை சீடராக அண்ணா தன்னை ஆக்கிக் கொண்டார். பெரியாரின் கொள்கையை செயல்படுத்தினார். எனவே அண்ணா இன்றைக்கல்ல, என்றைக்கும் மக்களிடத்தில் நிலைத்து நிற்பார் என்றார்.

































































