பெங்களூரு, டிச. 14: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி கர்நாடக பகுஜன் கூட்டமைப்பு சார்பில் குடியரசுத் தலைவர் தௌபதி மர்முவிடம் மனு அளிப்ப்போம் என்று கூட்டமைப்பின் நிறுவனரும், அதன் மாநிலத் தலைவருமான டாக்டர் ஜி.எச்.சங்கர் தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட், கர்நாடக பகுஜன் கூட்டமைப்பின் நிறுவனர், மாநிலத் தலைவர் டாக்டர் ஜி.எச்.சங்கர், முன்னாள் கார்ப்பரேட்டர் ஆர்.பதீப் குமார்ரெட்டி, ஒய்.மாரிசாமி, லயன் பாலகிருஷ்ணா, லேகா சிவசங்கர், பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் டாக்டர் ஜி.எச்.சங்கர் பேசியது: இந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து, இந்தியா மட்டுமின்றி தேசிய அளவில் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் ரஜினிகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். இதுவரை 171 திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.
பால்கே விருதையும் பெற்றுள்ளார்.சினிமாவுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து 50 ஆண்டுகள் சேவை செய்தவர். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் தமிழில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நண்பர் ராஜபகதூரின் ஒத்துழைப்புடன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு அவரது ஒவ்வொரு படமும் சரித்திரம் படைத்தது. ரஜினிகாந்த் 75 வயதிற்கு பிறகும் இன்னமும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு மொழி கடந்து மக்களிடத்தில் இன்னும் பெரும் ஆதரவு உள்ளது. தமிழ் மொழி மட்டுமின்றி அனைத்து மொழி படங்களிலும் நடித்து அனைவராலும் பாராட்டப்படுபவர். இதனால் திரைப்படத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பாரத ரத்னா விருது வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.
மேலும் ரஜினிகாந்த் 12.12.1950 இல் பெங்களூரு வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் பிறந்தார். அவரது தாயார் வீட்டு மனைவி மற்றும் அவரது தந்தை ரனோஜி ராவ் புனே (மகாராஷ்டிரா) மாவாடா கட்பேபதாரில் இருந்து ஒரு போலீஸ் தலைமை காவலராக இருந்தார்.
2 மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ் மற்றும் நாகேஸ்வர ராவ் மற்றும் சகோதரி அஸ்வதம் பாலுபாய் ஆகியோரைக் கொண்ட குடும்பத்தில் 4 உடன்பிறப்புகளில் அவர் இளையவர்.
1956 இல் அவரது தந்தை புனேவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, குடும்பம் பெங்களூரில் உள்ள ஹனுமந்த நகருக்கு குடிபெயர்ந்து ஒரு வீட்டைக் கட்டியது. அவர் தனது 7 வயதில் தனது தாயை இழந்தார்.

ரஜினிகாந்த் தனது ஆரம்பக் கல்வியை கவிபுரம் அரசு கன்னட மாதிரி தொடக்கப் பள்ளியில் பயின்றார். சிறுவயதில் அவர் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் படிப்பவராகவும் குறும்புக்காரராகவும் இருந்தார். இந்த நேரத்தில் அவரது சகோதரர் அவரை ராமகிருஷ்ணா மிஷனால் அமைக்கப்பட்ட இந்து மடாலயமான சாமராஜ்பேட்டை ராமகிருஷ்ண மடத்தில் சேர்த்தார்.
அவருக்கு வேதங்கள், பாரம்பரியம் மற்றும் வரலாறு கற்பிக்கப்பட்டது. அது இறுதியில் ஆன்மீக பாடங்களின் அர்த்தத்தில் இருந்தது. அவர் பின்னர் நாடகத்திலும் நடிக்கத் தொடங்கினார். நாடகத்தின் மீதான அவரது ஆர்வம் மேட்டில் வளர்ந்தது மற்றும் ஒருமுறை இந்து காவியமான மகாபாரத்தில் இருந்து ஏகலவ்யாவின் நண்பராக நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. நாடகத்தில் அவரது நடிப்பு கன்னட கவிஞர் டி.ஆர்.பெந்த்ரே உள்ளிட்டோரை கவர்ந்தது. தொடர்ந்து மார்க்கெட்டில் கூலி மற்றும் ஆபீஸ் பாய், கார்பென்டராக தனது வேலையைத் தொடங்கினார். பின்னர் அவர் அரசுப் போக்குவரத்துத் துறையில் நடத்துனராகச் சேர்ந்தார்.
1975 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் அவர்களால் தமிழில் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டார். அவரது முதல் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் அபூர்வ ரங்கங்கள், பின்னர் கன்னடம் மற்றும் தெலுங்கு மலையாளம் இந்தி பெங்காலி மற்றும் ஹாலிவுட் ஆகியவற்றில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைத்துறையில் குறிப்பாக தேசிய அளவில் அனைத்து மக்களிடமும் புகழ்பெற்று விளங்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.































































