பெங்களூரு, பிப். 2: தமிழ்நாட்டில் மீண்டும் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கொண்டுவர அனைவரும் பாடுபட வேண்டும் என்று கர்நாடக மாநில திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ந.இராமசாமி தெரிவித்தார்.
பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) கர்நாடக மாநில திமுகவின் தொமுச பேரவை சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், தமிழுக்காக, தமிழர்களுக்காக பாடுபடுபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா நடைபெற்றது.இதில், கலந்து கொண்ட ந.இராமசாமி இவ்வாறு பேசினார்.

நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் சட்டமேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத், கவிஞர் தமிழ்தாசன், ஆர்.எஸ்.கிரி, பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், போர்முரசு கதிரவன், ஏ.டி.ஆனந்தராஜ், வி.எஸ்.மணி, இளைஞரணிச் சேர்ந்த ராஜசேகர், மைசூரு பிரான்சிஸ் உள்ளிட்ட திமுகவின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், முத்துமணி நன்னன், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பெரியார் விருது ஹேமாவதி சண்முகத்திற்கும், அண்ணா விருது எஸ்.சிவசங்கரனுக்கும், கலைஞர் விருது க.கணேசனுக்கும், பேராசிரியர் விருது ரா.மா. செல்வத்திற்கும், மு.க. ஸ்டாலின் விருது மைசூர் ரகுபதிக்கும், முரசொலி மாறன் விருது ஏ.ஜான் ரபேலுக்கும், உதயநிதி ஸ்டாலின் விருது தங்கவயல் வழக்கறிஞர் பா.மணிவண்ணனுக்கும், முரசொலி செல்வம் விருது கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னனுக்கும் வழங்கப்பட்டது.

































































