முகப்பு Bengaluru அகில இந்திய மனித உரிமை கவுன்சில் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...

அகில இந்திய மனித உரிமை கவுன்சில் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

89
0

பெங்களூரு, பிப். 1: பெங்களூரில் பின்டோ தலைமையிலான அகில இந்திய மனித உரிமை கவுன்சில் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (ஜன. 31) நடைபெற்றது.

பெங்களூரு இந்திரா நகரில் சனிக்கிழமை அகில இந்திய மனித உரிமை கவுன்சிலின் தலைவர் பின்டோ தாமஸ் தலைமையில் அகில இந்திய மனித உரிமை கவுன்சில் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை இந்திராநகர் முதல் ஸ்டேஜ், ஸ்ரீ கிருஷ்ணா சாலையில் உள்ள ஸ்ரீ ராக்கம் பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அகில இந்திய மனித உரிமை கவுன்சிலில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஏற்கனவே இருந்த அதன் உறுப்பினர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராக்கம் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்கள். பிஸ்கட், ஜவுளி உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது. அதனை பள்ளியின் ஒரு சில மாணவர்கள், ஆசிரியர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய மனித உரிமை கவுன்சிலின் தலைவர் பின்டோ தாமஸ், கவுன்சிலின் உறுப்பினர்கள் மனித உரிமைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும். உறுப்பினர்கள் யாரும் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தக் கூடாது. தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் செயல்பட வேண்டும் என்றார்.

நிகழ்வில் அகில இந்திய மனித உரிமை கவுன்சிலின் துணைத் தலைவர் இருதய விஜய் ஏ, கர்நாடகம், தமிழக மாநிலங்களின் தலைவர் கவிதா கேர்மைன் ஜே, தென்னிந்திய மகளிர் அணியின் தலைவர் நதியா டி, கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்ட மகளிர் அணியின் தலைவர் தாமிதா டேவிட், கர்நாடகம், தமிழக மாநிலங்களின் மகளிர் அணியின் தலைவர் ராதா கே, கர்நாடக மாநிலத்தின் மூத்த குடிமக்கள் பிரிவின் தலைவர் சகாயநாதன், தென் கர்நாடக பிரிவின் செயலாளர் ஜி.சுந்தர் ஆச்சாரி,

கர்நாடக மாநில தலைவர் எலிஸபத் சந்த் சி.ஏ, கர்நாடகத்தின் வட பெங்களூரின் தலைவர் பிஎல் சந்தோஷ்குமார், கர்நாடக மாநில மகளிர் அணியின் தலைவர் ராஜேஸ்வரி டிஎன், தமிழகம் கோயமுத்தூர் மாவட்ட‌ மகளிர் அணியின் தலைவர் ஜெயந்தி, கர்நாடக மாநில மூத்த குடிமக்கள் மகளிர் அணியின் தலைவர் மேரி சுசிலா பி, தென் தமிழகத்தின் ஒருகிணைப்பு செயலாளர் சாய் பிரகாஷ் எச்,

கர்நாடக மாநில பிரேசர்டவுனின் இளைஞர் அணியின் தலைவர் எஸ்.பிரவீண் பிரின்ஸ் ஜான்சன், தென் கர்நாடக மூத்த குடிமக்கள் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் போலீஸ், ஊடகப்பிரிவின் பொறுப்பாளர் முத்துராமன், தென் கர்நாடக இளைஞர் அணியின் தலைவர் பிரகாஷ் வி, தென் கர்நாடகத்தின் துணைத் தலைவர் எம்.சாம்சன், கர்நாடக மாநில பெங்களூரு நகரத்தின் பொதுச் செயலாளர் சந்தோஷ் நரோனா, தென் கர்நாடகத்தின் துணை, இணை செயலாளர் ஏ. புளோரன்ஸ் டெய்ஸி,

கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூரின் இளைஞர் அணியின் சங்கீதா ஆர், தென் தமிழகத்தின் துணைத் தலைவர் பி.ஜான் ஹைடே, கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்தின் துணைத் தலைவர் சஷிகாந்த் அர்ஜுன் மெஸ்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அடையாளர் அட்டை, சான்றிதழ், பேட்ஜ் ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்