முகப்பு National சாதாரண (ஈக்விட்டி) பங்குகளின் முன்னுரிமை வெளியீடு வழியாக ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 39.618 கோடி...

சாதாரண (ஈக்விட்டி) பங்குகளின் முன்னுரிமை வெளியீடு வழியாக ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 39.618 கோடி முதலீடு செய்யும் எம்யுஎப்ஜி வங்கி

187
0

புதுடெல்லி, டிச. 23: ஸ்ரீராம் கபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாதாரண (ஈக்விட்டி) பங்குகளின் முன்னுரிமை வெளியீடு (Preferential issue) வழியாக ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.39,618 கோடி (44 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டை எம்யுஎப்ஜி பேங்க் லிமிடெட் (“MUFG பேங்க்) மேற்கொள்வதற்கான உறுதியான ஒப்பந்தங்களுக்கு (Definitive agreements) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முதலீடானது, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (SFL) -ல் முழுமையாக நீர்க்கப்பட்ட அடிப்படையில் (on a fully diluted basis) 20.0% பங்கினை MUFG பேங்க் பெறுவதற்கு வழிவகுக்கிறது.

店品 முக்கியமான பரிவர்த்தனையானது. மேலாண்மையின் கீழுள்ள சொத்துக்களின் (AUM) அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சில்லறை (Retail) வங்கி சாரா நிதி நிறுவனமான SFL-ன் வலுவான அந்தஸ்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது கீழ்வரும் காரணங்களுக்காக இந்தியாவின் நிதிசார் சேவைகள் துறையைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான மைல்கல் நிகழ்வாக இந்த முதலீட்டு நடவடிக்கை திகழ்கிறது:

இந்தியாவில் நிதிசார் சேவைகள் வழங்கும் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடாக (FDI) இது அமைந்துள்ளது.

இந்தியாவில் கடன் வழங்கல் மற்றும் நிதிசார் சேவைகள் துறையின் அடிப்படை அம்சங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியங்கள் மீதான நம்பிக்கையை இது மேலும் வலுப்படுத்துகிறது.

எஸ்எப்எலின் மூலதன அடித்தளத்தை வலுப்படுத்துவதோடு, அதன் வளர்ச்சி வேகத்தை மேலும் துரிதமாக்குகிறது.

எம்யுஎப்ஜி வங்கியால் செய்யப்பட முன்மொழியப்பட்டிருக்கும் இந்தச் சிறுபான்மை முதலீடானது எஸ்எப்எல் நிறுவனப் பங்குதாரர்களின் ஒப்புதல், ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி மற்றும் இத்தகைய பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கான வழக்கமான நிபந்தனைகளை (customary closing conditions) பூர்த்தி செய்வதற்கு உட்பட்டதாகும்.

இந்த ஒத்துழைப்பு முயற்சியானது எச்எப்எலின் வலுவான உள்நாட்டு வணிகக் கட்டமைப்பு மற்றும் விரிவான விநியோக வலையமைப்பை MUFG வங்கியின் உலகளாவிய திபுணத்துவம் மற்றும் நிதிசார் பலத்தோடு ஒருங்கிணைக்கிறது. இந்த நிதி முதலீடானது எஸ்எபெல் மூலதனப் போதுமை (Capital Adequacy நிலையை கணிசமாக மேம்படுத்துவதோடு அதன் இருப்புறிவைக் குறிப்பை (Balance sheet) வலுப்படுத்தும் மற்றும் நீண்டகால் வளர்ச்சிக்கான மூலதனத்தையும் வழங்கும்.

தொழில்நுட்பம் புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றில்
ஒருங்கிணைந்த ஆற்றல்களை இந்த ஒத்துழைப்பு வெளிக்கொணரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதன் மூலம் நிலைப்புத்தன்மையுள்ள வளர்ச்சி இன்னும் வலுவாக முன்னெடுக்கப்படும். குறைந்த செலவிலான நிதிப் பொறுப்புகளுக்கான (Liabilities) அணுகலை இந்த முதலீடு மேம்படுத்தும் என்பதோடு, எஸ்எப்எலின் கடன் தரக்குறியீடுகளை (Credit Ratings) மேலும் வலுப்படுத்தும். அதே வேளையில், உலகளவில் சிறந்த தரநிலைகளுக்கு இணையாக நிர்வாகம் மற்றும் இயக்க நடைமுறைகளை இது உருவாக்கும்.

இந்தியாவின் துடிப்பான நிதிசார் சேவைத்துறையின் மீது MUFG வங்கி கொண்டிருக்கும் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. எம்யுஎப்ஜி வங்கியின் தாய் நிறுவனமான மிட்சுபிஷி UF) ஃபைனான்ஷியல் குரூப் (MUFG), இந்தியாவில் 130 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டைச் செய்திருக்கும் இக்குழுமம், 5,000 வேலைவாய்ப்புகளை ஏறக்குறைய நபர்களுக்கு வழங்கியிருக்கிறது. எஸ்எப்எலில் செய்யப்படும் இந்த முதலீடு, இந்தியாவில் MUFG குழுமத்தின் மிகப்பெரிய முதலீடாக இருக்கும்; நிதிசார் உள்ளடக்கம் (Financial Inclusion) மற்றும் நிலைத்தன்மையுள்ள வளர்ச்சி மீது அது கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை இம்முதலீடு மேலும் உறுதிசெய்கிறது.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் உமேஷ் ரெவான்கர் இது குறித்துக் கூறியதாவது: “எமது வளர்ச்சிப் பயணத்தில் இம்முதலீடு ஒரு மிக முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. MUFG, பரந்து விரிந்த சர்வதேச வலையமைப்போடு, கணிசமான வளர்ச்சி மற்றும் நிதிசார் உள்ளடக்கத்தின் மீது உறுதியான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய நிதிசார் நிறுவனங்களுள் ஒன்றாகும். ஒரு முக்கிய முதலீட்டாளராக எம்யுஎப்ஜி-யின் இந்த வருகை, இந்தியாவின் நிதிசார் சேவைகள் துறையில் உலகளாவிய பெரு நிறுவனங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், இத்துறையில் ஒரு முதன்மை நிறுவனமாக எமது பங்கையும் பிரதிபலிக்கிறது. ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் எமது திறன்களை வலுப்படுத்துவதும், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதும், பல்வேறு சமூகங்களில் அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்குவதும், நம்பிக்கை மற்றும் சிறந்த நிர்வாகம் என்ற அடித்தளத்தில் எதிர்காலத்திற்குத் தயார் நிலையில் உள்ள ஒரு பெருநிறுவனத்தைக் கட்டமைப்பதுமே எமது நோக்கமாகும்.

மிட்சுபிஷி யுஎப்ஜே ஃபைனான்ஷியல் குழுமத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி ஹிரொனோரி கமீஸாவா, இந்நிகழ்வில் பேசுகையில், ‘இந்த பரிவர்த்தனை நடவடிக்கையை மேற்கொள்வதிலும், இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் நிதி நிறுவனங்களுள் ஒன்றான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முக்கிய கூட்டாளியாக இணைவதிலும் எம்யுஎப்ஜி பெருமைகொள்கிறது. எம்யுஎப்ஜி மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும், எதிர்காலத்திற்கான ஒரே மாதிரியான மதிப்பீடுகளையும் உலகளாவிய திறன்களைச் சிறப்பாகப் பகிர்ந்துகொள்கின்றன. பயன்படுத்துவதன் மூலம் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் உறுதியாக இருக்கிறது. அத்துடன், இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கும் சமூகங்களின் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பை வழங்குவது எமது நோக்கமாகும்.” என்று குறிப்பிட்டார்.

இந்த முதலீட்டுப் பரிவர்த்தனைக்கான ஆலோசகர்கள்:

எம்யுஎப்ஜி வங்கி: கேபிஎம்ஜி (KPMG) இந்தியா கார்ப்பரேட் ஃபைனான்ஸ் (முதன்மை
நிதி ஆலோசகர்), ஜே.பி. மோர்கன் (நிதி ஆலோசகர்), ஏஇசட்பி (AZB) & பார்ட்னர்ஸ் (சட்ட ஆலோசகர்), நிஷிமுரா & அசாஹி (கைக்கோகுஹோ கியோடோ ஜிகியோ) (சட்ட ஆலோசகர்).

ஸ்ரீராம் ஃபைனான்ஸ்: வாடியா காந்தி & கோ. (சட்ட ஆலோசகர்).

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்