பெங்களூரு, ஜூலை 25: புனித ஜோசப் பல்கலைக் கழகத்தில், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பின் தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து ஆய்வுச் செய்யப்பட்டது.

பெங்களூரில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி புனிதர் ஜோசப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் ஏழாவது உலக திருக்குறள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தின்படி புனித ஜோசப் பல்கலைக் கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பது குறித்து ஆய்வுச் செய்யப்பட்டது.

அப்போது மாநாட்டை முன் நின்று சிறப்பாக நடத்தியதற்காக தாய்மொழிக் கூட்டமைப்பு தலைவரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவருமான, முனைவர் எஸ்.டி.குமார் அவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் அருட்தந்தை டாக்டர் விக்டர் லோபோ எஸ்.ஜெ மற்றும் பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் கிறிஸ்டோ வி. செல்வன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கினர்.































































