முகப்பு Politics இந்திய தேசிய கட்டிட கட்டுமானம், வனம் மற்றும் மரத் தொழிலாளர் கூட்டமைப்பின் கர்நாடக மாநில துணைத்...

இந்திய தேசிய கட்டிட கட்டுமானம், வனம் மற்றும் மரத் தொழிலாளர் கூட்டமைப்பின் கர்நாடக மாநில துணைத் தலைவராக கே.என். தயாளன் நியமனம்

166
0

பெங்களூரு, பிப். 25: ஐஎன்டியுசியின் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் பிடபள்யூஐ (BWI ஜெனீவா) உடன் இணைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய கட்டிட கட்டுமானம், வனம் மற்றும் மரத் தொழிலாளர் கூட்டமைப்பின் (ஐஎன்பிசிடபிள்யூஎப்) கர்நாடக மாநில துணைத் தலைவராக கே.என். தயாளன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஐஎன்பிசிடபிள்யூஎப்பின் தேசியத் துணைத்தலைவரும், கர்நாடக மாநிலத் தலைவருமான ஜி.ஆர்.தினேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முன்னாள் ஏஐசிசியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்பியும், ஐஎன்பிசிடபிள்யூஎப் தேசியத் தலைவருமான மாண்புமிகு திரு. ராமச்சந்திரகுந்தி அவர்களின் உத்தரவின் பேரில், ஐஎன்பிசிடபிள்யூஎப் தேசிய பொதுச் செயலாளர் எம். விஜய் நாயக்கின் ஒப்புதலுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கர்நாடக மாநில துணைத் தலைவராக கே.என். தயாளன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் குழுக்களின் வழிகாட்டுதலின் கீழ், தங்களின் கீழ் வரும் அனைத்து உள்ளூர் தலைவர்களின் ஒத்துழைப்புடன், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை உண்மையாக நிறைவேற்றுவதில் கே.என். தயாளன் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தயாளன் காங்கிரஸ் கட்சியின் அமைப்புக்காகவும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும், ஐஎன்பிசிடபிள்யூஎப் சார்பாகவும், தொழிற்சங்கத்தில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைப் சேர்ப்பதன் மூலம், தயாளனிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் அவர் பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கே.என்.தயாளன் செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சியின் ஐஎன்பிசிடபிள்யூஎப் பிரிவின் தேசியத் தலைவரும், கர்நாடக மாநிலத் தலைவருமான ஜி.ஆர்.தினேஷ் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியை எனக்கு அளித்துள்ளார். அவரின் நம்பிக்கையை உண்மையாக்கும் வகையில் எனக்கு அளிக்கப்பட்ட இந்த பொறுப்பை திறம்பட செய்து, அவருக்கு பெருமை சேர்ப்பேன். இந்தப் பதவி மூலம் ஏழை, எளிய பொதுமக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வேன் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்