பெங்களூரு, ஜூலை 17: தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட நீட் யுஜி 2026 தேர்வு முடிவுகளில், அலென் கேரியர் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் தேசிய அளவில் மீண்டும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். அலென் பெங்களூரு வகுப்பறை பயிற்சி மாணவர்களான திகந்த் பி.எஸ். அகில இந்திய தரவரிசையில் (ஏஐஆர்) 64-வது இடத்தையும், ஷ்ரேயாங்க் ஜே 94-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து அலென் தெற்கு மண்டலத் தலைவர் மகேஷ் யாதவ் கூறியதாவது: “சிறந்த கல்வி முடிவுகளுக்குப் பெயர் பெற்ற அலென், இந்த ஆண்டும் தனது வெற்றிப் பாரம்பரியத்தைத் தொடர்ந்துள்ளது. தென் மண்டலத்தைச் சேர்ந்த நான்கு வகுப்பறை மாணவர்கள் அகில இந்திய முதல் 100 தரவரிசைக்குள் இடம்பிடித்துள்ளனர். வனிஷா சதீஷ் (ஏஐஆர்-51), திகந்த் பி.எஸ். (ஏஐஆர்-64), நவிதனா பி. (ஏஐஆர்-88), ஷ்ரேயாங்க் ஜே (ஏஐஆர்-94) ஆகியோரின் வெற்றி, தரமான பயிற்சி, அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் மாணவர் மையக் கல்வி முறையின் பலனை வெளிப்படுத்துகிறது” என்றார்.
அலென் தெற்கு முன்னணி மாணவர்கள்
- ஏஐஆர்-51: வனிஷா சதீஷ் – 6 ஆண்டு வகுப்பறை பயிற்சி
- ஏஐஆர்-64: திகந்த் பி.எஸ். – 2 ஆண்டு வகுப்பறை பயிற்சி
- ஏஐஆர்-88: நவிதனா பி. – 5 ஆண்டு வகுப்பறை பயிற்சி
- ஏஐஆர்-94: ஷ்ரேயாங்க் ஜே – 6 ஆண்டு வகுப்பறை பயிற்சி
தேசிய அளவில் அலெனுக்கு மீண்டும் மாபெரும் சாதனை:
நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் யுஜி 2026 முடிவுகளில், முதல் 10 அகில இந்திய தரவரிசையில் 5 அலென் மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். மேலும், இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் முதல் 100 இடங்களில் 44 அலென் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆர்யன் குப்தா மற்றும் பன்ஷுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்றனர். சமநிலை மதிப்பெண் (Tie-breaker) விதிகளின்படி ஆர்யன் குப்தா அலென்1, பன்ஷுல் பன்சால் AIR-2 பெற்றனர். ஆர்யன் குப்தா அலெனின் தொலைதூரக் கல்வித் திட்ட (DLP) மாணவராகவும், பன்ஷுல் பன்சால் இரண்டு ஆண்டுகள் வகுப்பறை பயிற்சி மாணவராகவும் இருந்தார்.
மேலும், வகுப்பறை மாணவர் ஆயுஷ் பாலோதியா ஏஐஆர்-4, ஆன்லைன் தேர்வு தொடர் மாணவர் ஆர்யன் துபே அ-7, வகுப்பறை மாணவர் கௌரவ் சிங் ஏஐஆர்-9 ஆகிய இடங்களைப் பெற்றனர்.அலென் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிதின் குக்ரேஜா, வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இதுவரை பகுப்பாய்வு செய்யப்பட்ட முடிவுகளின்படி, முதல் 10 இடங்களில் 5 பேரும், முதல் 100 இடங்களில் 44 பேரும் அலென் மாணவர்கள். இதில் 36 பேர் வகுப்பறை பயிற்சி மாணவர்களும், 8 பேர் டி எல்பி மற்றும் ஆன்லைன் தேர்வு தொடர் மாணவர்களும் உள்ளனர்.
மேலும், 690 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற முதல் 138 மாணவர்களில் 60 பேர் அலென் மாணவர்கள் என்பது பெருமைக்குரிய சாதனையாகும். இவர்களில் 50 பேர் வகுப்பறை பயிற்சி மாணவர்களும், 10 பேர் டிஎல்பி மற்றும் ஆன்லைன் தேர்வு தொடர் மாணவர்களும் ஆவர்” என்றார்.






























































