முகப்பு Education பெங்களூரில் பேஸ் ஐஐடி & மெடிக்கல் பிராந்திய மையம் திறப்பு

பெங்களூரில் பேஸ் ஐஐடி & மெடிக்கல் பிராந்திய மையம் திறப்பு

செயல்முறை வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஒயிட்பீல்டில் உள்ள பிஏஆர்எஸ்இசி நிறுவனத்துடனான கூட்டு முயற்சியை அறிவித்ததோடு, அறிவியல் மற்றும் கணிதத் திருவிழாவுடன் பெங்களூரில் புதிய மையம் தொடங்கப்பட்டது.

5
0

பெங்களூரு, அக். 11: ஜேஇஇ, நீட் மற்றும் அடிப்படை நிலை (Foundation-level) போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் முன்னணி பயிற்சி நிறுவனமான பேஸ் ஐஐடி & மெடிக்கல், பெங்களூரில் தனது புதிய பிராந்திய மையத்தை இன்று திறந்து வைத்தது. இந்த மையம் எம்ஜி ஸ்கொயர், 2-வது தளம், விர்கோநகர் தொழிற்பேட்டை, ஆவலஹள்ளி, குருடுசொன்னஹள்ளி (பெலத்தூர் பிரதான சாலைக்கு அருகில்), பெங்களூரு – 560049 என்ற முகவரியில் அமைந்துள்ளது.

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற திறந்தவெளி அறிவியல் மற்றும் கணிதத் திருவிழாவுடன் இந்தத் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு, புதிய விஷயங்களைக் கண்டறிதல், பரிசோதனைகள் செய்தல் மற்றும் கலந்துரையாடல் வழி கற்றல் ஆகியவற்றை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

பிரிக்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் பிரிக்ஸ் பே இந்தியாவின் தலைவர் டாக்டர் பவன் ஜோஷ் (Dr. Pawan Josh) மற்றும் கௌரவ வர்த்தக ஆணையர் திரு. ரஃபி அகமது (Mr. Rafi Ahmed) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மையத்தைத் திறந்து வைத்தனர். இவர்களுடன் பேஸ் ஐஐடி & மெடிக்கலின் இயக்குனர் திரு. குல்தீப் தியாகி (Mr. Kuldeep Tyagi), மூத்த ஆசிரியர் (வேதியியல்) திரு. அங்கித் அகர்வால் (Mr. Ankit Agarwal) மற்றும் பேஸ் ஐஐடி & மெடிக்கல் பெங்களூருவின் முதன்மை உரிமையாளர் (Master Franchisee) திருமதி வீணா ராஜாய் (Mrs. Veena Rajai) ஆகியோர் உடனிருந்தனர். பேஸ் ஐஐடி & மெடிக்கலின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. பிரவீன் தியாகி (Mr. Praveen Tyagi) காணொளி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஓயிட்பீல்டில் உள்ள பிஏஆர்எஸ்இசி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இத்திருவிழாவில், அறிவியல் பரிசோதனைகள், கணிதச் சவால்கள், புதிர்கள் மற்றும் கலந்துரையாடல் சார்ந்த செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை மாணவர்களிடையே ஆர்வம், விமர்சன ரீதியான சிந்தனை மற்றும் அறிவியல் கோட்பாடுகள் குறித்த நடைமுறை புரிதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் புதிய மையத்தைச் சுற்றிப் பார்த்ததுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

அனுபவ வழி கற்றலுக்கான கூட்டுப் பார்வை: பேஸ்–பிஏஆர்எஸ்இசி கூட்டணி

இந்தத் தொடக்க விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, பிஏஆர்எஸ்இசியின் அறிவியல் ஆய்வகங்களுக்கும் பேஸ் ஐஐடி & மெடிக்கல் பெங்களூருவிற்கும் இடையிலான கூட்டு முயற்சி குறித்த அறிவிப்பை டாக்டர் பவன் ஜோஷ் வெளியிட்டார். வகுப்பறைப் பாடங்களுடன் நடைமுறை ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளை இணைத்து, மாணவர்களுக்கு நேரடி மற்றும் செயல்முறை வழி அறிவியல் கற்றல் வாய்ப்புகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்தக் கூட்டு முயற்சியானது, கல்வியை மேலும் சுவாரஸ்யமானதாகவும், நடைமுறைப் பயன்பாடு சார்ந்ததாகவும், இளம் மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

பெங்களூரு மையத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்ததில், திருமதி. வீணா ராஜாயின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மும்பையைச் சேர்ந்த ‘பேஸ் ஐஐடி & மெடிக்கல்’ நிறுவனத்தின் பாரம்பரியம் ஆகியவை முக்கிய காரணிகளாக அமைந்தன என்று கூறி, இந்த முன்னெடுப்பின் மீது டாக்டர் ஜோஷ் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மாணவர்கள் கோட்பாட்டு ரீதியான கருத்துகளை நிஜ உலகப் பயன்பாடுகளுடன் இணைத்துப் புரிந்துகொள்ளும் வாய்ப்புகளை இக்கூட்டு முயற்சி உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை, பகுப்பாய்வுச் சிந்தனை மற்றும் அறிவியல் குறித்த ஆழமான புரிதல் ஆகியவற்றை வளர்க்க உதவும்.

வீணா ராஜாயின் தொலைநோக்கு: ஒரு ஒருங்கிணைந்த கல்விச் சூழலை உருவாக்குதல்

‘பேஸ் ஐஐடி & மெடிக்கல்’, பெங்களூருவின் முதன்மை உரிமையாளராக (Master Franchisee) செயல்படும் திருமதி. வீணா ராஜாய், கல்விசார் சிறப்பம்சம், கருத்துத் தெளிவு, நடைமுறை கற்றல் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான கல்விச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

அவரது தொலைநோக்குப் பார்வை ஒரு பயிற்சி மையத்தை அமைப்பதோடு நின்றுவிடுவதில்லை. மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதோடு, தங்கள் திறன்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், எதிர்காலக் கல்வி மற்றும் தொழில்முறை சவால்களுக்குத் தயாராகும் வகையிலான அர்த்தமுள்ள கற்றல் அனுபவங்களைப் பெறவும் கூடிய ஒரு சூழலை உருவாக்குவதையே அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

தனது தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசிய திருமதி. வீணா ராஜாய் கூறியதாவது:
“பாடப்புத்தகங்கள் மற்றும் தேர்வுகளையும் தாண்டிச் செல்லும் தரமான கல்வியை வழங்கும் ஒரு கல்விச் சூழலை உருவாக்குவதே எனது தொலைநோக்கு. மாணவர்கள் கற்றலை அனுபவப்பூர்வமாக உணரவும், கருத்துகளைக் கேள்விக்குள்ளாக்கவும், பரிசோதனைகள் செய்யவும், புதியவற்றை ஆராயவும், தங்கள் லட்சியங்களை நோக்கிச் செல்லும் நம்பிக்கையைப் பெறவும் நான் விரும்புகிறேன். மும்பை பேஸ் ஐஐடி & மெடிக்கலின்ன் பாரம்பரியம் மற்றும் நிரூபிக்கப்பட்ட கற்பித்தல் முறைகளுடன், பெங்களூருவில் இந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதும், கல்விசார் சிறப்பில் புதிய அளவுகோல்களை நிறுவுவதும், ஒவ்வொரு மாணவரின் திறனையும் வளர்க்கும் கற்றல் சூழலை உருவாக்குவதும் எங்கள் குறிக்கோளாகும்.”

கோட்பாட்டு அறிவுக்கும் நடைமுறைப் பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் பிஏஆர்எஸ்இசி போன்ற நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

பெங்களூருவில் மேற்கொள்ளப்படும் இந்த முன்னெடுப்பானது, ‘பேஸின் நீண்டகாலப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதோடு, மாறிவரும் கல்விச் சூழலுக்கு ஏற்ற கூட்டு கற்றல் வாய்ப்புகள் மற்றும் மாணவர்-மைய அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்துகிறது.

பெங்களூரு மையத்தில் வழங்கப்படும் திட்டங்கள்

இந்த புதிய பிராந்திய மையமானது, பேஸ் ஐஐடி & மெடிக்கலின் அடிப்படைப் பாடத்திட்டங்கள் (Foundation) மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு வகுப்புகளை வழங்கும்.

  • அடிப்படைப் பாடத்திட்டம் (Foundation Programme) – 7 முதல் 10-ஆம் வகுப்பு வரை: அறிவியல் மற்றும் கணிதத்தில் அடிப்படைகளை வலுப்படுத்துதல் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பகுப்பாய்வு மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை வளர்த்தல். ‍ஜேஇஇ மற்றும் கேசிஇடி தேர்வுக்கான தயாரிப்பு: ஐஐடிகள்,என்ஐடிகள் மற்றும் கர்நாடகாவில் உள்ள கல்லூரிகள் உட்பட முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆதரவளித்தல்.
    ‍நீட் தேர்வுக்கான தயாரிப்பு: மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்குத் திட்டமிட்ட கல்விசார் வழிகாட்டுதலை வழங்குதல்.

கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வகையிலான கற்பித்தல், தொடர் மதிப்பீடுகள், சந்தேகங்களைத் தீர்க்கும் வசதி மற்றும் தனிப்பட்ட கல்விசார் வழிகாட்டுதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மாணவர்கள் தெளிவுடனும் தன்னம்பிக்கையுடனும் தேர்வுக்குத் தயாராக உதவுவதை இம்மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய வகுப்புகளுக்கான சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆலோசனை மற்றும் சேர்க்கை விவரங்களைப் பெற, மையத்தை நேரில் அணுகலாம் அல்லது +91 91877 02739 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தலைமையின் கருத்துகள்

தொடக்க விழாவில் காணொளி வாயிலாகப் பேசிய பேஸ் ஐஐடி & மெடிக்கலின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. பிரவீன் தியாகி கூறியதாவது:

“நாட்டின் மிகச் சிறந்த இளம் திறமையாளர்கள் பலருக்கு பெங்களூரு இருப்பிடமாகத் திகழ்கிறது. இந்த மையத்தின் மூலம், ‘ஃபவுண்டேஷன்’ (அடிப்படை) ஆண்டுகள் முதல் JEE மற்றும் NEET தேர்வுகள் வரை, பேஸின் கற்பித்தல் முறை மற்றும் முடிவுகளை மையமாகக் கொண்ட வழிகாட்டுதலை இங்குள்ள மாணவர்களுக்கு மிக அருகில் கொண்டு வர விரும்புகிறோம்” என்றார்.

பேஸ் ஐஐடி & மெடிக்கலின் இயக்குநர் திரு. குல்தீப் தியாகி மேலும் கூறியதாவது:

“இன்றைய இந்த நிகழ்வு, மாணவர்கள் எவ்வாறு கற்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது: அதாவது கேள்விகள் கேட்பது, பரிசோதித்துப் பார்ப்பது மற்றும் கற்றல் செயல்முறையை ரசித்து அனுபவிப்பது ஆகியவற்றின் மூலம் கற்க வேண்டும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில், ஆரம்பத்திலேயே வலுவான அடிப்படைக் கருத்துகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதே எங்கள் நோக்கமாகும்” என்றார்.

மூத்த ஆசிரியரான (வேதியியல்) திரு. அங்கித் அகர்வால் கூறியதாவது:

“இந்த மையத்திற்கு வரும் ஒவ்வொரு மாணவருக்கும் கல்விசார் வழிகாட்டுதல், சந்தேகங்களைத் தீர்க்கும் தொடர் ஆதரவு மற்றும் தேர்வுக்கான முறையான தயாரிப்புத் திட்டம் ஆகியவை வழங்கப்படும். மாணவர்கள் பாடக் கருத்துகளை வெறும் மனப்பாடம் செய்வதை விடுத்து, அவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்