முகப்பு Bengaluru பசவனகுடி கோ-ஆப்டெக்ஸில் ‘பழசுக்குப் புதுசு’ பட்டுப் புடவை எக்ஸ்சேன்ஜ் திருவிழா

பசவனகுடி கோ-ஆப்டெக்ஸில் ‘பழசுக்குப் புதுசு’ பட்டுப் புடவை எக்ஸ்சேன்ஜ் திருவிழா

14
0

பெங்களூரு, அக். 8: தீபாவளியை முன்னிட்டு, பெங்களூரு பசவனகுடி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ‘பழசுக்குப் புதுசு’ பட்டுப் புடவை எக்ஸ்சேன்ஜ் திருவிழா அக்டோபர் 7 முதல் 20 வரை நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய வெள்ளி ஜரிகை பட்டுப் புடவைகளை வழங்கி, அவற்றின் மதிப்பிற்கேற்ப புதிய பட்டுப் புடவைகள் அல்லது பிற துணி ரகங்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும், 30 % சதவீத சிறப்புப் பண்டிகைத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

தீபாவளிக்காகப் புதிய வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பட்டுப் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இச்சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோ-ஆப்டெக்ஸ் பெங்களூரு மண்டல மேலாளர் வி. பாலசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விற்பனை நிலையம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8. 30 மணி வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும்.

முகவரி: கோ-ஆப்டெக்ஸ், எண் 109 & 110, காந்தி பஜார், பசவனகுடி, பெங்களூரு – 560004.
தொடர்புக்கு: 8124263646.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்