பெங்களூரு, ஏப். 18: உலகின் விருப்பமான நகைக்கடை நிறுவனமான ஜோயாலுக்காஸ், பெங்களூருவின் இந்தப் பகுதி மக்களுக்கு தன்னம்பிக்கை, நேர்த்தி மற்றும் உலகத்தரம் வாய்ந்த நகைகளின் சங்கமத்தைக் கொண்டுவரும் வகையில், ராஜாஜிநகரில் தனது முதல் ஷோரூமைத் திறந்துள்ளது. இந்த புதிய நகைக்கடையின் பிரம்மாண்டமான திறப்பு விழா ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இது நகரம் முழுவதும் உள்ள நகை பிரியர்களுக்கு ஒரு மைல்கல் நிகழ்வாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.
ஜோயாலுக்காஸின் சர்வதேச தரத்தின் ஒரு ‘அடையாளமாக’ விளங்கும் இந்த புதிய ஷோரூம், விசாலமான உட்புறங்கள், சமகால வடிவமைப்பு மற்றும் பல்வேறு நகை வகைகளுக்கான பிரத்யேகப் பகுதிகளைக் கொண்டிருக்கும். காலத்தால் அழியாத தங்க நகைகள் மற்றும் நேர்த்தியான மணப்பெண் நகைகள் முதல் மிகச்சிறந்த வைரங்கள், விலைமதிப்புள்ள கற்கள் மற்றும் வெள்ளி வரை இங்கு நகைகளின் வகைகள் உள்ளன. ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையையும், உண்மையிலேயே ஒரு ஆடம்பரமான ஷாப்பிங் சூழலையும் எதிர்பார்க்கலாம்.
திறப்பு விழாவைக் கொண்டாடும் விதமாக, ஜோயாலுக்காஸ் நிகழாண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் சிறப்பு கேஷ்பேக் வவுச்சர்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ. 75,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள வைரம், பட்டை தீட்டப்படாத வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளை வாங்கும்போது ரூ. 2,000/- கேஷ்பேக் வவுச்சரையும், ரூ. 75,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்கம் மற்றும் விலைமதிப்புள்ள நகைகளை வாங்கும்போது ரூ. 21,000/- கேஷ்பேக் வவுச்சரையும், மற்றும் ரூ. 15,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள வெள்ளி நகைகளை வாங்கும்போது ரூ. 2500/- கேஷ்பேக் வவுச்சரையும் பெறுவார்கள்.
புதிய கிளையின் திறப்பு விழாவை அறிவித்து, ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜோய் அலுக்காஸ் கூறியதாவது, “ராஜாஜிநகரில் எங்களின் முதல் ஷோரூமைத் திறப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இப்பகுதி, கலாசாரம் மற்றும் சிறந்த நகைகள் மீதான ஆழ்ந்த மதிப்புக்குப் பெயர் பெற்றது. ஜோய் அலுக்காஸில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த வடிவமைப்பையும் சிறந்த சேவையையும் வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்று, உலகின் விருப்பமான நகைக்கடைக்காரருடன் ஷாப்பிங் செய்யும் மகிழ்ச்சியை அனுபவிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்” என்றார்.
தனது தனித்துவமான வடிவமைப்பு, சமரசமற்ற தரம் மற்றும் நட்பான வாடிக்கையாளர் சேவையுடன், ஜோய் அலுக்காஸ் ராஜாஜிநகர்வாசிகளுக்கான நகை வாங்கும் அனுபவத்தை மறுவரையறை செய்யத் தயாராக உள்ளது.































































