முகப்பு Uncategorized 3 தமிழர்களை சுட்டுக் கொன்றதற்கு கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம் கடும்...

3 தமிழர்களை சுட்டுக் கொன்றதற்கு கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

25
0

பெங்களூரு, ஆக. 16: 3 தமிழர்களை சுட்டுக் கொன்றதற்கு கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கருநாடக வனத்துறை அதிகாரிகள் மூன்று தமிழர்களை கொன்றது மனிதநேயத்திற்கு எதிரான செயல் இதை கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கருநாடக அரசை வற்புறுத்துகிறோம். இறந்தவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் அடிப்பட்டு மருத்துவ மனையில் சிக்கிசை பெறும் தமிழருக்கு மருத்துவ செலவுக்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டுகிறோம். எல்லாவற்றிக்கும்மேலாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்து நியாமான நீதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்

என அச்சங்கத்தின் கௌரவ தலைவர் திரு. டீ. லட்சுமிபதி, தலைவர் திரு. அ. தனஞ்செயன், செயலாளர் முனைவர் இரா. பிரபாகரன், இணை செயலாளர் திருமதி. மெர்லின், பொருளாளர் திருமதி சுசித்தா ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்