பெங்களூரு, ஆக. 13: பெங்களூர் குயின்ஸ் சாலையில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்’ அரங்கத்தில் (தினச்சுடர், சஞ்சேவாணி நாளிதழ் அலுவலகம் எதிரில்) வரும் 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, நெருப்பலையார் பரம்பரைப் பேரவை மற்றும் பாவாணர் பாட்டரங்கப் புலனக்குழு இணைந்து நடத்தும் மரபுப் பாவேந்தர் நெருப்பலையார் இராம இளங்கோவன் அவர்களின் பவழவிழா ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.
காலை 9 மணிக்குத் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கும் விழாவில் முன்னாள் பெங்களூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் வா. சிறீதரன் ஆன்மிக வாழ்த்தும், முன்னாள் பொருளாளர் சு. ஒளிமலரவன் குறள் வாழ்த்தும் வழங்குகின்றனர்.
திருவொற்றியூர் அம்மன் ஜீவலர்ஸ் தொழிலதிபர் இராம சீனிவாசன் தலைமை தாங்க, பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவர் முனைவர் எஸ். டி. குமார் முன்னிலை வகிக்க, பெங்களூர் தமிழ்ச் சங்கத் துணைச் செயலாளர் வா.கோபிநாத் வரவேற்புரையாற்றுகிறார். தொடர்ந்து காலை 10 மணி 3 முதல் நண்பகல் 1மணி வரை 16 வரிகளில் பா படைக்கும் சிறப்புப் பாட்டரங்கம் 10 அமர்வுகளாக நடைபெறுகிறது.
முதல் அமர்விற்கு ஓய்வுபெற்ற ஐ.டி.ஐ.தலைவர் டாக்டர் க. அழகேசன் தலைமை தாங்க, பாவலர்கள் எடப்பாடி ஆ.அழகேசன், தெ.சச்சுதானந்தம், இரா.கர்ணன், ஆ.இல.இளவல், க.சண்முக சிதம்பரம், பாடலாசிரியர் தேன்மொழியன் ஆகியோர் பாடுகின்றனர்.
2வது அமர்விற்குத் தலைமையாசிரியர் சா.சரவணன் தலைமை தாங்க, பாவலர்கள் அரங்கநாயகி கண்ணன், சொல்லரசி வீணைதேவி, புலவர் செ.ரோணிக்கம், கி. பங்கஜவள்ளி, தெய்வநாயகி அய்யாசாமி ஆகியோரும்.
3வது அமர்விற்குத தமிழலை தங்கசாரா தலைமை தாங்க, பாவலர்கள் அ. கமல் நொச்சிப்பூந்தளிரன், குறளன்பன் பு.சு. ஆறுமுகம், செ.கார்த்திகேயன். கு. கணேசன், முத்து குமாரசாமி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
4வது அமர்விற்குத் தருமபு மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி பாவலர் பொன். ஒளிநிலா தலைமை தாங்க, பாவலர்கள் முனைவர் கிருட்டினதிலகா, நந்தினி மோகன முருகன், சு.வித்யா கார்த்திக், ம.இலாவண்யா, கதிர் பாரதி ஆகியோரும்,
5வது அமர்விற்கு மருத்து வப் பாவலர் ஆ.ச.கந்தன் தலைமை தாங்க, பாவலர்கள் அ.ம.இரவிச்சந்திரன், அரி கே.பி.கே.ஆரணி, தனம்.அ வேளாங்கண்ணி, மும்பை நா.நம்பிராஜன், பெரு. இராமகிருட்டினன் ஆகியோரும் பாடுகின்றனர்.
6வது அமர்விற்குப் பேரா மு. கலைமதி தலைமை தாங்க முனைவர் சி.முத்துமாலை கவிமாமணி இர. தேன்மொழி பாவலர்கள் வே. கல்யாண குமார், பா.நாகூர்பிச்சை, இலாவண்யா, கோ ஆதிரை சுப்பிரமணியன் ஆகியோரும்,
7வது அமர்விற்கு மருத்துவம் பாவலர் ப. ஆதம் சேக் அலீ தலைமை தாங்க, ஆசுக கே.ஜி.இராஜேந்திர பாபு. எழுத்தாளர் ஜெயா வெங்கட்ராமன், தமிழ்ச் செம்மல் க.பன்னீர்செல்வம், பாவலர்கள் கரு.பி.கார்த்திகேயன். முனைவர் பாரதி கோவிந்தம்மாள், இரா சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
8வது அமர்விற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாவலர் அன்பு செயா தலைமை தாங்க, இசைப் பாவலர் பி.வி.இரத்தினம், பாவலர்கள் கண்ணதாசதாசன், ம.பாஸ்கர். பி.அந்தோணிசாமி, வேங்கடலட்சுமி செந்தமிழ் இயல் (செ.கற்பகம்) ஆகியோரும்,
9வது அமர்விற்கு பேரா. சக்திவேல் தலைமை தாங்க, பாவலர்கள் மணிமேகலை. ஏ.திருநாவுக்கரசு, இராம தியாகராஜன், அருள் இசபெல்லா. நா.சிவக்கனி, ஏவியார் ஆகியோரும்,
10வது அமர்விற்கு பொற்கிழிப்பாவலர் கொ.சி. சேகர் தலைமை தாங்க, பாவலர்கள் ஜெய்சக்தி, விஜயலட்சுமி காளிதாசன், கர்னல் மு.குமார். அரங்க. கிருட்டினமூர்த்தி, திருமதி வை.சிதம்பரம் ஆகியோரும் கவிதை பாடுகின்றனர்.
நண்பகல்உணவுக்குப் பின் பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நடைபெறும் நூல்கள் வெளியீட்டு அமர்வில், ‘வாழும் வரலாறு நெருப்பலையார்’ நூலைக் கவிச்சுடர் கவிதைப்பித்தனும், ‘நெருப்பலை யார் கிளிக்கண்ணி’ நூலை முனைவர் கா.மு.சேகரும், சிறப்பு மலரை டாக்டர் ஆ.மதுசூதனபாபுவும்,
செந்தமிழ் இயலின் ‘பரிதி யாழ்’ நூலைப் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்துமணி நன்னனும், விஜயலட்சுமி காளிதாசனின் ‘யாழ் மொழியாள் நூலை பைப்பனஹள்ளி டாக்டர் டி. ரமேஷும் வெளியிடுகின்றனர். இந்நூல்களின் முதற்படிகளை டாக்டர் இரா.பாஸ்கரன். சுரேஷ்குமார், இந்திரகுமார், ஜெ.மதன்குமார், பி. எஸ்.காளிதாசன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்குச் செங்கை சண்முகம் வரவேற்புடன் தொடங்கும் கருத்தரங்கிற்கு டாக்டர் ஆ.மதுசூதனபாபு தலைமை தாங்க, விநாயகம் எம், அ.முனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கவிச்சுடர் கவிதைப்பித்தன் வாழ்த்துரையும். முனைவர் கா.மு.சேகர் சிறப்புரையும் வழங்க, புலவர் மு.சரவணன், வெற்றியாளன், சுவாமி இராமானுஜம், முனைவர் வி.சரளா ஆறுமுகம் ஆகியோர் பாராட்டுரை ஆற்றுகின்றனர்.
மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறும் நிறைவு மற்றும் விருது வழங்கும் விழாவில், நிகழ்ச்சியில் பங்கேற்ற சான்றோர்கள். பாவலர்கள் மற்றும் டாக்டர் இரா.பாஸ்கரன், கு. மாசிலாமணி. வா.சிறீதரன், தமிழ்ச் செய்தியாளர்கள் பாவலர் ஏ.வி.மதியழகன், தினகரவேலு,
தொழிலதிபர்கள் கே.சடகோபன். டாக்டர் சி.சம்பத், ஜி. கணேஷ், கே.தட்சிணாமூர்த்தி, இர. வினோத், க.இராஜசேகர், கோபி ஏகாம்பரம் உள்ளிட்ட பலருக்குச் சிறப்புப் பாராட்டுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், கவிச்சுடர் கவி தைப் பித்தன், முனைவர் கா.மு.சேகர், இராம. சீனிவாசன், முனைவர் ஆ. மதுசூதன்பாபு. முனைவர் எஸ். டி. குமார். பையப்பனஹள்ளி டாக்டர் டி. ரமேஷ், நெருப்பலையார் இராம இளங்கோவன் ஆகியோருக்கு இலக்கிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
உலகிலேயே முதன்முறையாக 210 வகைப் பாவினப் போட்டியில் வெற்றி பெற்ற பாவலர்கள் அன்பு செயா (ஆஸ்திரேலியா), திருமகள் சிறீ பத்மநாதன் (பிரித்தானியா), சா. சரவணன், க.பன்னீர்செல்வம், க.சண்முக சிதம்பரம், முனைவர் சி. முத்துமாலை, முத்துகுமாரசாமி. முனைவர் பாரதி கோவிந்தம்மாள், தெய்வநாயகி அய்யாசாமி, வேங்கடலட்சுமி இராமர், செந்தமிழ் இயல் (செ.கற்பகம்),சா. நாகூர் பிச்சை, சு.வித்யா கார்த்திக். கோ. இலாவண்யா. ம. இலாவண்யா, நா. சிவக்கனி. விஜயலட்சுமி காளிதாசன் ஆகியோருக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.
விழாவின் நிறைவாக மரபுப் பாவேந்தர் நெருப்பலையார் இராம இளங்கோவன் ஏற்புரையாற்ற, இலக்கிய இமயப் பாவலர் அ. கமல் நன்றியுரையும், பொற்கிழிப் பாவலர் கொ.சி.சேகர் விழாத் தொகுப்புரையும் வழங்குகின்றனர். விழா ஏற்பாடுகளை நெருப்பலையார் பரம்பரைப் பேரவை, பாவணர் பாட்டரங்கப் புலனக்குழு ஆகியவை செய்கின்றன.






























































