முகப்பு Health மருந்தில்லா மருத்துவம்: விழிப்புணர்ச்சி முகாம், பலர் பங்கேற்று பயன்

மருந்தில்லா மருத்துவம்: விழிப்புணர்ச்சி முகாம், பலர் பங்கேற்று பயன்

141
0

பெங்களூரு, பிப். 9: பெங்களூரு காச்சரகனஹள்ளியில் மருந்தில்லா மருத்துவம் குறித்த‌ விழிப்புணர்ச்சி முகாம் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு இலவச சிகிச்சைப் பெற்று சென்றனர்.

பெங்களூரு காச்சரகனஹள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மருந்தில்லா மருத்துவம் குறித்த‌ விழிப்புணர்ச்சி முகாம் நடைபெற்றது. இதனை கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ந.முத்துமணி, முன்னாள் ராணுவ வீரரும், ஆஷ்ரயா செக்யூரிட்டி சர்வீஸின் உரிமையாளருமான பாபு, ஏ1 எஜிகேஷன் சென்டரின் முதல்வர் இதயவாணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர். ஹீலர் மலர்வண்ணன் தலைமையில் இந்த மருத்துவ விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு, அக்குபஞ்சர் சிகிச்சை,விழிப்புணர்வு, ஆலோசனை பெற்று சென்றனர்.

முகாமில் பேசிய மலர்வண்ணன், மருந்தில்லா மருத்துவத்தை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இது எனது முழு நேரத்தொழில். இந்த மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், மருந்தில்லா மருத்துவம் குறித்த‌ விழிப்புணர்ச்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை நடத்தப்படுகிறது. இது போன்ற முகாம்கள் மென்மேலும் நடத்த முடிவு செய்துள்ளேன்.

அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் நான், விதை சிகிச்சை, காந்த சிகிச்சை, நாய்கடி வைத்தியம், ஸ்பைன் தெரபி உள்ளிட்ட சிகிச்சை செய்து வருகிறேன். இதன் மூலம் பக்கவிளைவுகள் இல்லாத மருந்தில்லா மருத்துவத்தை மக்களுக்கு வழங்க முடிகிறது. அற்புதமான இந்த மருத்துவம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லாமல் உள்ளது. இதனால் அவர்கள் இந்த மருத்துவத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற முகாம்களை நடத்தப்படுகிறது என்றார். மேலும் விவரங்களுக்கு 99008 78618 என்ற செல்லிடபேசியில் அணுகலாம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்