முகப்பு Bengaluru கர்நாடகாவில் கன்னடர்களும், தமிழர்களும் ஒற்றுமையாக சகோதரர்கள் போல் வாழ்கின்றனர்: கர்நாடக ராஜயோத்சவ விழாவை தொடங்கி வைத்து...

கர்நாடகாவில் கன்னடர்களும், தமிழர்களும் ஒற்றுமையாக சகோதரர்கள் போல் வாழ்கின்றனர்: கர்நாடக ராஜயோத்சவ விழாவை தொடங்கி வைத்து முனைவர் எஸ்.டி.குமார் பேச்சு

8
0

பெங்களூரு, நவ. 28: கர்நாடகாவில் கன்னடர்களும், தமிழர்களும் ஒற்றுமையாக சகோதரர்கள் போல் வாழ்கின்றனர் என்று கர்நாடக ராஜயோத்சவ விழாவை தொடங்கி வைத்து முனைவர் எஸ்.டி.குமார் பேசினார்.

71 ஆம் ஆண்டு கர்நாடக ராஜயோத்சவ விழாவை கன்னட ரக்ஷன வேதிகே யுவ படை சார்பில் பெங்களூரு பிரதர் டவுனில் அதன் தலைவர் சத்திஷ் தலைமையில் நடைபெற்றது. விழாவை குத்து விளக்கேற்றி, கன்னட கொடியேற்றி, அங்குள்ள புனித் ராஜ்குமார் சிலைக்கு மாலை அணிவித்து தாய்மொழிக் கூட்டமைப்பு தலைவரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் பேசும் போது, கர்நாடகாவில் கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்கள் போல் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

கர்நாடகத்தில் உள்ள தமிழ் பெற்றோர்கள் கன்னட பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைக்கின்றனர், கன்னடம் படிக்க வைத்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த மண்ணின் மொழியான கன்னடத்தை நேசிக்கின்றனர். இந்த மண்ணுக்கு விசுவாசமாக வாழ்கின்றனர் என்று பேசினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்