முகப்பு Bengaluru திருவள்ளுவர் தின விழாவை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு மீண்டும் நன்றி: பைப்பனஹள்ளி ரமேஷ்

திருவள்ளுவர் தின விழாவை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு மீண்டும் நன்றி: பைப்பனஹள்ளி ரமேஷ்

பிப். 15 ஆம் தேதி நாம் சோழர்கள் அமைப்பின் கர்நாடக நிர்வாகிகள் பதவி ஏற்பு, தமிழர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச தமிழ் மாநாடு

96
0

பெங்களூரு, பிப். 9: திருவள்ளுவர் தின விழாவை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிப். 15 ஆம் தேதி நாம் சோழர்கள் கர்நாடக நிர்வாகிகள் பதவி ஏற்பது, சர்வதேச தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அவ்வமைப்பின் சர்வதேசத் தலைவர் சத்குரு ஜெயபிரகாஷ் குருஜி, மாநிலத் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், சர்வதேச பொதுச் செயலாளர் பிரகாஷ்பழனி, மாநில செயலாளர் விநாயக், தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ. தாமோதரன், முன்னாள் செயலாளர் வா.ஸ்ரீதரன், நிர்வாகி கோபிநாத் உள்பட காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக, தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய பைப்பனஹள்ளி ரமேஷ், கடந்த ஜன. 15 ஆம் தேதி எனது தலைமையில், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒருவிழாவின் தனிமனிதரால் சிறப்பாக செய்யமுடியாது. அனைவரும் ஒன்றிணைந்து செய்ததால் அந்த விழா வெற்றி பெற்றது. விழா சிறப்பாக நடைபெறுவதற்கு சிலர் நிதி அளித்தவர்களும் முக்கிய காரணம்.

அதில் குறிப்பாக சிவாஜிநகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத், சாம்ராஜ்பேட்டை விநாயக், பிரகாஷ் பழனி, முன்னாள் கவுன்சிலர் உதய், உரிமைக்குரல் எம்.ஜி.ஆர் ரவி, முன்னாள் மேயர் சம்பத்ராஜ், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கான்ஸ்டபள், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணா, சீனிவாஸ், சேலத்திலிருந்து வந்த நண்பர், பாஸ்கர் ஆகியோர் 2.6 லட்சம் நிதி வழங்கி உள்ளனர். விழாவிற்கு செலவான தொகை 4.75 லட்சமாகும். மீதமுள்ள தொகையை நான் வழங்கினேன் என்பதனை இங்கு கூற கடமை பட்டுள்ளேன்.

வரும் பிப். 15 ஆம் தேதி நாம் சோழர்கள் நிர்வாகிகள் பதவி ஏற்கின்றனர். எம்.ஜி.சாலை, உதயா டிவி நிலையம் அருகே உள்ள மதர் டெக்லா ஆடிட்டோரியத்தில் மாலை 4 மணியளவில் நாம் சோழர்கள் அமைப்பின் நிர்வாகிகள் பதவி ஏற்பு, தமிழர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச தமிழ் மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அதன் சர்வதேசத் தலைவர் சத்குரு ஜெயபிரகாஷ் குருஜி, நாம் தமிழர்கள் என்பதனைத்தான் ஏற்கனவே அப்பெயரில் கட்சி ஒன்று உள்ளதால், நாம் சோழர்கள் என்று பெயர் வைத்துள்ளோம். இதில் பாண்டியர்களின் பெயரை ஏன் வைக்கவில்லை என்று யாரும் குறை கூற வேண்டாம். தமிழர்கள் பிரிந்து கிடப்பதால்தான் கர்நாடகத்தின் ஒரு எம்.பியாகவோ, ஒரு எம்.எல்.ஏவாகவோ, ஒரு எம்எல்சியாகவோ வரவில்லை.

தமிழர்கள் ஒன்றிணைந்து தமது பலத்தைக் காட்டினால், எல்லா பதவிகளும் தமிழர்களை தேடி வரும். இதில் கட்சி பேதமில்லை. எந்த கட்சி தமிழர்களுக்கு வாய்ப்பு அளித்தாலும், அவர்கள் நாங்கள் ஆதரிப்போம். சிங்கப்பூர், மலேசியா, கம்போடியாவை வெற்றிக் கொண்ட‌ சோழர்களின் பரம்பரை என்பதனை நிரூபித்து, தமிழர்கள் வளர்ச்சி அடைய வேண்டும். தமிழர்களின் வளர்ச்சிக்கு நாம் சோழர்கள் அமைப்பு தொடர்ந்து உதவும்.

சோழர்கள் அக்காலத்திலேயே மழை நீர் சேகரிப்பு, ஆடு வளர்ப்பு ஆகியவற்றை ஊக்குவித்துள்ளனர். தஞ்சை பெரிய கோவிலில் ஒரு துளை மழை நீர் தேங்காமல் இருக்கும் கட்டுமானத்தை உருவாக்கி உள்ளனர். ஆகச்சிறந்த அவர்களின் வாரிசு நாம் என்பதனை நிரூபித்துக் காட்டுவோம். கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழர்கள் தலைமை பொறுப்பிற்கு வருவதற்கு முன்னெடுப்போம். அரசியல் அதிகாரத்திலும் தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்கு நாமெல்லாம் ஒற்றுமையாக நின்று முன்னெடுப்போம் என்றார். பின்னர் அனைவருக்கும் பிப். 15 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்கான பாஸ் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்