முகப்பு Uncategorized தமிழர்களை அதிகாரப் பதவியில் அமர்த்த வேண்டும்: பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

தமிழர்களை அதிகாரப் பதவியில் அமர்த்த வேண்டும்: பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

112
0

பெங்களூரு, பிப். 18: தமிழர்களை அதிகாரப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு எம்.ஜி.சாலை உதயா டிவி நிலையம் அருகே உள்ள மதர் டெக்லா ஆடிடோரியத்தில் சனிக்கிழமை நாம் சோழர்கள் என்ற அமைப்பின் சார்பில் அதன் கர்நாடக மாநில நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் சர்வதேச தலைவர் சத்குரு ஜெய்பிரகாஷ் குருஜி, கர்நாடக மாநிலத் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், மாநில செயலாளர் விநாயகா, நிர்வாகி பிரகாஷ் பழனி, அனுராதா பிரகாஷ், நிர்மலா விநாயகா, குணசேகர், நந்தகுமார், ராஜேந்திரன் உட்பட, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆப்பிரிக்கா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் டி.ரமேஷ், உலக அளவில் அமைக்கப்பட்டுள்ள நாம் தோழர்கள் அமைப்பின் கர்நாடக நிர்வாகிகள் இன்று பதவி ஏற்று கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் சோழர்கள் அமைப்பின் முக்கிய குறிக்கோளாக தமிழர்களை பொருளாதாரத்தில் முன்னேற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேபோல அவர்களை அதிகாரப்பதவியில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளது. தமிழர்கள் அதிகாரப் பதவியில் அமர்ந்தால் மட்டுமே அவர்கள் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைய முடியும். மேலும் தமிழர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச தமிழ் வர்த்தக மாநாடு நடைபெற்றது. கம்போடியா வரை ஆட்சியை பரவலாக்கிய சோழர்கள், திருவள்ளுவரின் திருக்குறளை பின்பற்றி, வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துக் கொண்டார்கள்.

அவர்களைப் போல உலக அளவில் பரவி உள்ள தமிழர்களும் வர்த்தகம் உள்ளிட்டவைகளில் சிறந்த விளங்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் சோழர்கள் அமைப்பு கொண்டுள்ளது. அதற்கு தேவையான முயற்சிகளையும் உதவிகளையும் அவர்களுக்கு நாம் சோழர்கள் அமைப்பு செய்து கொடுக்க முடிவு செய்துள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குறுகிய காலத்தில் நாங்கள் விடுத்து அழைப்பு ஏற்று இன்று திரளாக வந்துள்ள அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர்கள் எதிர்காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினாலும் அதில் திரளாக கலந்து கொண்டு வெற்றியடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்