முகப்பு International வள்ளலார் பெருவெளியை புனித பூமியாக அறிவிக்க தமிழக முதல்வருக்கு பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் கடிதம்

வள்ளலார் பெருவெளியை புனித பூமியாக அறிவிக்க தமிழக முதல்வருக்கு பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் கடிதம்

105
0

பெங்களூரு, மே 5: பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் நடைபெற்ற வள்ளலார் விழாவில் தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ்.டி.குமார் அவர்கள் வடலூரில் உள்ள வள்ளலார் உருவாக்கிய பெருவெளியை, புனித பூமியாக அறிவிக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்புவதாக கூறினார்.

அதன் அடிப்படையில் பல்வேறு வள்ளலார் அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களுடன் கலந்தாய்வு செய்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு வள்ளலாரின் பெருவெளி பகுதியை புனித பூமியாக அறிவிக்க பெங்களூர் திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இது குறித்து திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ். டி. குமார் அவர்கள் கூறும் போது. ஒட்டுமொத்த வடலூரையும் நாங்கள் புனித பூமியாக அறிவிக்க கோரவில்லை வள்ளலார் உருவாக்கிய பெருவெளியை உள்ளடக்கிய சுற்றுப்புற பகுதியை மட்டுமே புனித பூமியாக அறிவிக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்வேறு வள்ளலார் சங்க முக்கிய பிரமுகர்களுடன் பேசி கருத்தொற்றுமை ஏற்படுத்தியுள்ளதன் அடிப்படையில், தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான வள்ளலார் அமைப்புகள் தமிழக அரசுக்கு கடிதங்கள் அனுப்பி தங்களது வேண்டுகோளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பார்கள். மேலும் மாபெரும் உலக அதிசயமான, 158 ஆண்டுகளாக தொடர்ந்து அணையா அடுப்பாக இருக்கும் சத்திய தரும சாலை தொடங்கிய மே 25 ஆம் தேதியை கருத்தில் கொண்டு,

வருகிற 25.5.25 அன்று நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு, வள்ளலாரை பின்பற்றும் திரளுடன், வடலூரில் உள்ள வள்ளலார் சங்க அமைப்புகளுடன் இணைந்து வள்ளலாரின் பெருவெளி பகுதியை புனித பூமியாக அறிவிக்க தமிழக அரசுக்கு ஒற்றுமையாக குரல் கொடுப்போம் என்று திருவள்ளுவர் சங்கத் தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ்.டி.குமார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்