முகப்பு Bengaluru 3-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா-2024: சிறந்த தமிழ்நூல் பரிசுப் போட்டிக்கான முடிவுகள்

3-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா-2024: சிறந்த தமிழ்நூல் பரிசுப் போட்டிக்கான முடிவுகள்

128
0

பெங்களூரு, டிச. 16: 3-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா-2024: சிறந்த தமிழ்நூல் பரிசுப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பெங்களூரு, டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் வீதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில் உள்ள தி இன்ஸ்டிடுயூஷன் ஆஃப் எஞ்சினியர்ஸ் வளாகத்தில் 2024ஆம் ஆண்டு டிச.20 முதல் 29ஆம் தேதிவரை நடைபெறவிருக்கும் 3-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சிறந்த தமிழ் இலக்கியங்களை அடையாளம் கண்டு பாராட்டும் பொருட்டு, கருநாடக மற்றும் கருநாடகம் அல்லாத‌ தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல் போட்டியில் தேர்வுக்குழுவினர் சிறந்ததாக தேர்ந்தெடுத்த படைப்புகள் கீழே குறிப்பிட்டுள்ளவாறு அறிவிக்கப்படுகின்றன.

தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் டிச.21ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் சிறந்த தமிழ்நூல்கள் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்படும்.

சிறந்த தமிழ்நூல் பரிசுப்போட்டி முடிவுகள்:

கருநாடக தமிழ்நூல்கள்:

முதல் பரிசு(ரூ.5,000):
வருக்கெ சக்கெ(புதினம்) – பேராசிரியர் அ. சங்கரி

இரண்டாம் பரிசு(ரூ.3,000):

  1. பிளவு(கன்னட நூல் மொழிபெயர்ப்பு) – திரு.ஜெயா வெங்கட்ராமன்2. எரியும் மண் மணிப்பூர்(பயணக்கட்டுரை) – திருமதி.கிருத்திகா தரன்

மூன்றாம் பரிசு(ரூ.2,000):
தொடுவானத்து நட்சத்திரம்(கவிதை) – திருமதி.ஜெய்சக்தி

சிறப்புப் பரிசு(ரூ.2,000):
வம்ச விருட்சம்( கன்னட நூல் மொழிபெயர்ப்பு) – திரு.கே.நல்லதம்பி

ஊக்கப் பரிசு(ரூ.1,000):
ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – திருமதி.மீனாக்ஷி பாலகணேஷ்

கருநாடகம் அல்லாத தமிழ்நூல்கள்:

முதல் பரிசு(ரூ.5,000):
சிவப்பு நிறத் தலைக்கவசம்(புதினம்)– திரு.ஜே.கே.பிரதாப்

இரண்டாம் பரிசு(ரூ.3,000):
ஆத்தாக் கிழவி (புதினம்)–திரு.செ.ப.சிவராசன்

மூன்றாம் பரிசு(ரூ.2,000):
அறிவார்ந்த பெற்றோரியல்(உளவியல் கட்டுரை) – திரு.கே. ஏ. குணா

சிறப்புப் பரிசு(ரூ.1,000):
நமது மூளை நமது எதிர்காலம்(கட்டுரை) – மருத்துவர் மு.அ.அலிம்

தமிழுக்கு அழிவில்லாத அறிவார்ந்த இலக்கியங்களை படைத்தளித்து, பரிசுகளை வென்றிருக்கும் இலக்கியவாதிகள், அதை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா குழுவினர் சார்பில் பாராட்டுதல்களை தெரிவித்து மகிழ்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்