பெங்களூரு, செப். 3: தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் அவர்கள் தலைமையில் கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாட்டு குழுவினர் மங்களூரு தமிழ்ச்சங்கம், சுள்ளியா தமிழ்ச்சங்க நிர்வாகிகளை சந்தித்து பிரசாரம் செய்தனர்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அக். 20 ஆம் தேதி கன்னடர், தமிழர் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு குறித்து மங்களூரு தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் அவர்கள் தலைமையில் மாநாட்டு குழுவினர் மங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினர். இதில் மங்களூரு தமிழ்ச் சங்க முக்கிய நிர்வாகிகள் கெளரவ தலைவர் குமரேசன், செயலாளர் செந்தில் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சண்முகம்,மக்கள் தொடர்பு செய்திப் பிரிவு ஹரி துரைசாமி உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் தென் கனரா மாவட்டம் சுள்ளியா பகுதியில் உள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு ஆலோசனை குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் தனஞ்செயன், கோபி ஏகாம்பரம், ராஜசேகர், திருமலை ஆகியோர் சந்தித்து கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு குறித்து விளக்கி, பிரசாரம் செய்தனர்.
42 காலனி பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் சென்று பிரசாரம் செய்ததில், மாநாடு வெற்றி பெற பெருந்திரளாக கலந்து கொள்வதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதில் சுள்ளியா தமிழ்ச் சங்க நிறுவனர் பெருமாள், சுள்ளியா தமிழ்ச் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் கார்த்திக், பொருளாளர் கணேஷ், இணைச் செயலாளர் ஆனந்த் ராஜ், ராமகிருஷ்ணன். பத்மநாபன், நாராயணசாமி, மகேஷ்வரா, உட்பட ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.































































