முகப்பு Conference கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு-கர்நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்: தமிழ் ஆர்வலர் முனைவர்...

கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு-கர்நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்: தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார்

121
0

பெங்களூரு, அக். 17: அக். 20 ஆம் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற உள்ள கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு, கர்நாடக வரலாற்றில் தமிழர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.

மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: பெங்களுரு அரண்மனை மைதானத்தில் அக். 20 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 9 ஆம் எண் நுழை வாயில் பிரின்சஸ் ஷ்ரைனில் கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 2 அரங்கங்களில் நடைபெறும் மாநாட்டில் தமிழர்களும், கன்னடச் சகோதரர்களும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

நாள் முழுவதும் 3 கட்டங்களாக நடைபெற உள்ள மாநாட்டில், முதல் கட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் உரை நிகழ்த்துவார்கள். இரண்டாம் கட்டமாக கன்னடம், தமிழ் கவிஞர்களிம் இலக்கிய நிகழ்ச்சிகளும், 3 ஆம் கட்டமாக தமிழில் சிறந்தவர்களுக்கு பாராட்டி, கௌரவிக்கப்படும்.

மற்றொரு அரங்கத்தில் கலை, கலாசார, உணவுத் திருவிழாவும் நடைபெறும். கலை நிகழ்ச்சியில் பல பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும், தமிழ் ஆர்வர்களும் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ் மண் சார்ந்த‌ கலை நிகழ்ச்சிகளோடு, கர்நாடகத்தின் டொல்லு குனிதா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பெங்களூரில் நடைபெறும் இந்த மாநாடு, கர்நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்று அருதியிட்டு கூறலாம். காரணம் இது போன்ற முன்னெடுப்பை இந்த மாநிலத்தில் யாரும் செய்யவில்லை. குறிப்பாக இது போன்ற பிரமாண்டமான முறையிலான மாநாட்டிற்கான ஏற்பாட்டை யாரும் செய்ததில்லை.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மாநாட்டின் பிரசாரத்திற்கு நாங்கள் சென்ற போது, எங்களை 4 முதல் 5 மணி வரை காத்திருந்து எங்களுக்கு வரவேற்பு அளித்தனர். சுள்யாவை சுற்றி உள்ள 40 கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த மாநாட்டிற்காக தங்கள் கிராமங்களை விட்டு முதன்முறையாக வெளியே வருகின்றனர். அவர்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மாநாட்டில் ம‌க்கள் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு சில எம்.எல்.ஏக்கள் பேருந்து வசதிகளை செய்து தந்துள்ளனர். இது தமிழர்களும், கன்னடர்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு இணக்கத்தை எடுத்து காட்டுகிறது. மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர் வைகோ, தொல்.திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி உள்ளனர்.

அரசு அதிகாரிகளாக உள்ள பலர் தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளோடு, நல்ல முயற்சி என்றும், மாநாட்டிற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளனர். நடைபெற உள்ள மாநாடு தமிழரின் வாழ்வியல் மாநாடாகும். தமிழர்கள் ஒன்று சேர்ந்து தங்களது பலத்தை காண்பிப்பதோடு, கன்னட சகோதரர்களுடன் ஒன்றிணைந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், நமது சந்ததியின் எதிர்கால வளர்ச்சிக்கும் தேவையான அடித்தளத்தை கட்டமைக்க வேண்டும்.

மாநாட்டிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் தமிழர்கள், கன்னட சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டு, நம்மை பிளக்க நினைக்கும் தீய சக்திகளுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டும் என்றார். பேட்டியின் போது பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், தனஞ்செயன், முத்துமணி நன்னன், ஸ்ரீதர், ராஜேந்திரன், ராஜசேகரன், திருநாவுக்கரசு, செந்தில்நாதன், கோபி ஏகாம்பரம், சரளா, திருமலை, ராஜகுரு, குப்புராஜ், கோவலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்