பெங்களூரு, ஆக. 4: கர்நாடக ரஜ்புத் சமாஜ் மற்றும் பெங்களூர் மாவட்டத்தினர் புதிதாக பதவி ஏற்ற அமைச்சர் அஜய்சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அண்மையில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் புதிய அமைச்சராக அஜய்சிங் பதவி ஏற்றார். அவரை, அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை, கர்நாடக ரஜ்புத் சமாஜ் மற்றும் பெங்களூர் மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்த வாழ்த்து தெரிவித்தனர்.

குழுவில், கர்நாடக ரஜ்புத் சமாஜ் மற்றும் பெங்களூர் மாவட்டத்தின் தலைவர் அஜித்சிங், பொதுச் செயலாளர் பாலாஜிசிங் ஆர். (வழக்கறிஞர்), துணைத் தலைவர் டி.ஆர்.பாலாஜிசிங், நிர்வாகக் குழு உறுப்பினரும், தர்மஸ்தலா திரு. வீரேந்திர ஹெக்டேவின் உதவியாளருமான கிருஷ்ணாசிங், நிர்வாகக் குழு உறுப்பினர் பாலாஜிசிங், அமைச்சர் அஜய்சிங்கின் உறவினரும், நிர்வாகக் குழு உறுப்பினருமான சந்திராசிங் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் பெற்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் அஜித்சிங், செயலாளர் பாலாஜி சிங் ஆகியோர், புதிதாக பதவி ஏற்றுள்ள அஜய்சிங்கை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். மேலும் அவருக்கு ஒதுக்கும் துறையில் சிறப்பாக செயல்பட்டு, எங்கள் சமுதாய மக்களுக்கு மட்டுமின்றி, மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி, அதனை சிறப்பாக செயல்படுத்தி, கர்நாடகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டோம் என்றனர்.































































