முகப்பு Spritual ராமசாமிபாளையம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்

ராமசாமிபாளையம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்

69
0

பெங்களூரு, ஜூலை 6: பெங்க‌ளூரு இராமசாமிபாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

பெங்களூரு ராமசாமிபாளையம் (ஆர்.எஸ்.பாளையா) வீரபத்ரப்பா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஆலய புனரமைப்பு மற்றும் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஜூலை 3 முதல் 5ம் தேதி வரை நடத்த ஆலய அறக் கட்டளை முடிவு செய்தது. அதன்படி கடந்த 3ம் தேதி மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. முதல் நாளில் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடை பெற்றது. பகல் அன்ன தானமும், மாலை வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் அங்குரார்ப்பணம் கும்ப அலங்காரம் நடைபெற்றது.

விழாவில் இரண்டாவது நாளான சனிக்கிழமை காலை இரண்டாம் காலயாக பூஜை, வேதிக அர்ச்சனை, திரவிய ஹோமங்களும் காலை 11 மணிக்கு பிம்மசுத்தி, தம்பதி பூஜை, பிரம்மாச்சாரி பூஜை, கன்யா பூஜை, கோபூஜை, தீபாரதனையும் நடைபெற்றது. பகல் அன்னாதம் வழங்கப்பட்டது. மாலை மூன்றாம் கால யாகபூஜை, வேதிக அர்ச்சனை, சிறப்பு ஹோமம், நாடிசந்தானம், மூர்த்திகளுக்கு கண் திறந்தல் ஆகியவை நடைபெற்றது. விழாவில் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், சுவர்ஹூதி, மகாபூர்ணஹூதி ஆகியவை நடைபெற்ற‌து.

காலை 9 மணிக்கு பஞ்சமதிதி, சதயம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோகத்தில் 9 மணி முதல் 10.30 மணி வரை சிம்ம லக்னத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீதட்சணாமூர்த்தி, ஸ்ரீதுர்கா, நவகிரகம் மற்றும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 11 மணிக்கு மகா அபிஷேகம், 11.30 மணிக்கு மாங்கல்ய பூஜை, பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்ட‌து. மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேர் வீதி உலா அழைத்து செல்லப்பட்ட‌து.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாநில மின்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், பெங்களூரு மத்திய‌ தொகுதி மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் எம்.சி.சீனிவாஸ், கோவிந்தராஜ், முன்னாள் பாஜக‌ தலைவர் எம்.என்.ரெட்டி, ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய மகளிர் சங்க உறுப்பினர் சுப்புலட்சுமி சேகர், உதவி காவல் ஆணையர் அனுஷா, பானஸ்வாடி காவல் ஆய்வாளர் சுதர்ஷன், பானஸ்வாடி போக்குவரத்து ஆய்வாளர் கிரிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்த‌னர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்