முகப்பு Bengaluru “சத்குரு யோகி சித்தர் ரகோத்தமா” சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி

“சத்குரு யோகி சித்தர் ரகோத்தமா” சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி

120
0

பெங்களூரு, மார்ச் 6: “சத்குரு யோகி சித்தர் ரகோத்தமா சுவாமிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள க‌ருங்குளி பிருந்தவன் என்ற இடத்திலியிருந்து, பெங்களூர் எம்.வி.கார்டன் (M.V.GARDEN) உள்ள ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு வியாழக்கிழமை (மார்ச் 5) ஆசி வழங்கினார்.

சத்குரு யோகி சித்தர் ரகோத்தமா சுவாமிகள், உரிமைகுரல் பாரத ரத்ன டாக்டர் எம்ஜிஆர் நலியுற்றோர் நல ற‌க்கட்டளயின் நிறுவனர் சேவா ரத்னா, டாக்டர் எம்ஜிஆர் ரவி அவர்களால் அழைத்து வரப்பட்டார்.

இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கு கொண்டு “யோகி சித்தர் ரகோத்தமா” சுவாமிகளை தரிசனம் செய்து, ஆசி பெற்றனர். திரோபதி அம்மன் ஆலயத்தின் நிறுவன சுவாமிகள் வா. ஸ்ரீதரன் சுவாமிகள், கோபிநாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சித்தர் சுவாமிகளுக்கு மரியாதை செய்தனர்.

உரிமை குரல் எம்ஜிஆர் நலியுற்றோர் நல உறுப்பினர்கள் திரு. சுந்தர்ராஜ், திரு ஆல்பர்ட், திரு குண‌சேகர், பாத்திமா, திருமதி கோமதி, கலைவாணி, எழில் அரசி, திருமதி அனிதா மற்றும், “குருஜி பாஸ்கர்” உள்ளிட்டோர் “யோகி சித்தர் ரகோத்தமா சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.

தாயார் பூஷ‌னம், மகன் சுந்தர்ராஜ், மருமகள் சுசீலா, பிள்ளகள் நிகிதா, சுசித்ரா, உஷா, சுரேஷ் மற்றும் மகேஷ் ஆகியோர் குடும்பத்துடன் சிறப்பு பூஜை செய்து, யோகி சித்தர் ரகோத்தமா சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.

மேலும் நிகழ்வில் கர்நாடகாவின் சிங்கப் பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி சுமதி, துணைத் தலைவி கீதா, செயலாளர் பாத்திமா உள்பட ஏராளமான உறுப்பினர்கள் கலசம் ஏந்தி யோகி சித்தரை வரவேற்றனர்.

கர்நாடக மகிளா சேவா சமாஜ் அமைப்பை சேர்ந்த திருமதி ரமணி, ஷில்பா, மேக்கி, கிளாரா, வாஸி மற்றும் சீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு, சித்தர் சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட காலைக்கதிர் புகைப்படக் கலைஞர், பெங்களூர் தினமணி செய்தியாளர் தினகரவேலு ஆகியோருக்கு சேவா ரத்னா டாக்டர் எம்ஜிஆர் ரவி அவர்கள், திரு சுந்தர்ராஜ் மற்றும் திரு குணசேகர் உள்ளிட்டோர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்