பெங்களூரு, நவ. 25: இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களை, முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் கர்நாடக தமிழர்கள் சந்தித்து, இலங்கையில் எட்டாவது உலகத் திருக்குறள் மாநாடு நடத்த கோரிக்கை வைத்தனர்.

இதன் தொடர்பாக இலங்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்
சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களிடம் பெங்களூரில் நடைபெற்ற ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டை தொடர்ந்து, எட்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டை இலங்கை அரசு சார்பில் முன்னெடுக்க வேண்டும் என்று தாய்மொழிக் கூட்டமைப்பு தலைவரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவருமான எஸ்.டி.குமார் கோரிக்கை விடுத்தார்.

அப்போது இலங்கை அமைச்சர், கர்நாடக தாய்மொழிக் கூட்டமைப்பு வைத்த கோரிக்கையை, அந்நாட்டு அரசுடன் கலந்து பேசி, எட்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டை இலங்கையில் நடத்துவது குறித்து நல்ல முடிவெடுப்போம். ஏனெனில் திருக்குறள் உலக பொதுமறை, திருவள்ளுவருடைய கருத்துக்கள் எந்த நாட்டுக்கும் பொருந்தும், எந்த காலத்திற்கும் பொருந்தும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் என்றார். மேலும் கரோனா காலத்தில் இலங்கை நாட்டிற்கு, இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்ததற்கு நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்தவர்களும் உடன் இருந்தனர்.


























































