வடலூர், மே 27: வள்ளலார் பெருமகனாரில் பெருவழியை புனித பூமியாக அறிவிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருக்கிறோம். இது தொடர்பாக பேச, விரைவில் தமிழக முதல்வர் எங்களை அழைப்பார் என்று நம்புகிறோம் என்று பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், தாய்மொழிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 1867 ஆம் ஆண்டு வள்ளலார் பெருமகனால் தொடங்கப்பட்ட, 158 ஆண்டுகள் நிறைவு பெற்று, 159 ஆம் ஆண்டு தொடக்கநாளையொட்டி, உலக அதிசயமாக திகழ்கிற, சத்திய தர்மசாலை, அவர் மூட்டிய அடுப்பினுடைய கனல், 158 ஆண்டுகளாக இன்றைக்கு நிறைவு பெற்றுள்ளது என்று சொன்னால் உண்மையிலேயே அது தமிழர்கள் பெருமைபடக்குடிய விஷயமாகும்.
இது போல உலகத்திலேயே எங்கும் நடைபெறாத ஓரு உலக அதிசயமாகும். வேறு எங்கும் இது போல தொடர்ந்து 158 ஆண்டுகளாக அடுப்பு எரிந்தது கிடையாது. அப்படிபட்ட உலக அதிசயம் தந்த அந்த வள்ளல் பெருமகனார் உருவாக்கிய சத்தியஞானசபை உள்ளடக்கிய அந்த பெருவழியை, புனித பூமியாக அறிவிக்க நாங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இந்த புனித பூமியாக அறிவித்தபதன் மூலம் திருவள்ளுவரை பின்பற்றிய உலகத்திற்கே புகழ் பரப்பக்கூடிய, புகழ் நெறியில் இருக்கக்கூடிய, வள்ளலார் பெருமகனாருடைய புகழ் உச்சியை அடையும் என்ற காரணத்தினால், எங்களுடைய கோரிக்கையை வள்ளலார் பெருவழியை புனித பூமியாக அறிவிக்க கேட்க இருக்கின்றோம்.
இது சம்பந்தமாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அவர் விரைவில் எங்களிடம் பேச அழைப்பார் என்று கருதுகிறோம். இதற்கு முன்னெடுப்பாக பெங்களூரிலிருந்து திருவள்ளுவர் சங்கமும், தாய்மொழிக் கூட்டமைப்பும், வடலூரில் வாழுகின்ற வள்ளலார் பெருமகனாரின் சங்க அமைப்புகளும், பல்வேறு சங்க அமைப்புகளும், அவரை பின்பற்றுபவர்களும்,
நாங்களும் வள்ளலார் பெருமகனாரில் பெருவழியை புனித பூமியாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். விரைவில் தமிழக முதல்வர் எங்களை சந்திக்க அனுமதிப்பார் என்றும் நம்புகிறோம் என்றார். பேட்டியின் போது வடலூர் வள்ளலார் சங்கங்களை சேர்ந்தவர்களும் உடனிருந்தனர்.































































