முகப்பு Bengaluru ஜுன் 1 இல் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருமணமேடை 161- வது நேர்காணல்

ஜுன் 1 இல் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருமணமேடை 161- வது நேர்காணல்

90
0

பெங்களூரு, மே 29: பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருமணமேடை 161- வது நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெற உள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருமண மேடை 161- வது நேர்காணல்.பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருமண மேடை 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருமண மேடை பிரிவில் தமிழினத்தைச் சார்ந்த அனைத்து பிரிவினரும் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர்.

ஆதிதிராவிடர், முதலியார், பிள்ளை, கவுண்டர், வன்னியர், சத்திரியர், முக்குலத்தோர், விஷ்வகர்மா, செட்டியார், நாடார், யாதவர் உள்ளிட்ட பல பிரிவினரும் அவர்களுடைய உட்பிரிவைச் சார்ந்தவர்களும் திருமண மேடை எனும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ந்து பயனடைந்து வருவதுடன், பலர் கலப்புத் திருமணமும் செய்து வருகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் கத்தோலிக்கப் பிரிவினரும், தெலுங்கு பேசும் நாயுடு வகுப்பினரும், கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த ஆண்களும், மணமுறிவு பெற்றவர்களும் நமது சங்கத் திருமண மேடை பிரிவில் பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கர்நாடகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழகம், மும்பை, டெல்லி மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் ஏராளமானோர் நமது திருமண மேடையில் பதிவு செய்துள்ளனர். இதுவரை ஆயிரகணக்கான மணமேடை உறுப்பினர்களுக்கு திருமண மேடை வழியாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.

பதிவு செய்தோர் மேலும் பயன் பெறும் வகையில் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை சங்கத்தில் “நேர்காணல் நிகழ்ச்சி” நடத்தப்படுகிறது. அதே சமயம் பதிவு செய்த ஆண் மற்றும் பெண் மேடையில் அறிமுகம் செய்யபடுவர்.

இந்த மாதம் 161-வது நேர்காணல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (01-06-2025) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை 10 மணி வரை பதிவு செய்யும் அனைவரையும் அன்று அறிமுகப்படுத்தப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் சங்க தொலைபேசி எண் 25510062 தொடர்பு கொள்ளவும்.

மேற்கண்ட செய்தியை சங்கத்தலைவர் கோ. தாமோதரன் செயலாளர் மு.சம்பத் திருமணமேடை பொறுப்பாளர்கள் அமுதபாண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்