முகப்பு Special Story முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் தமிழீழ விடுதலைப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்

முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் தமிழீழ விடுதலைப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்

87
0

பெங்களூரு, மே 20: முனைவர் எஸ். டி. குமார் அவர்கள் தலைமையில் தமிழீழ விடுதலைப் போரில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட, ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு தஞ்சாவூர் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி நினைவேந்தல் கடைப்பிடித்தனர்.

தஞ்சாவூர் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கர்நாடக தமிழர்கள் தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர். பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவர் முனைவர் எஸ். டி. குமார் அவர்கள் தலைமையில் சென்று தமிழீழ விடுதலைப் போரில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட, ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு மெழுகு வர்த்தி ஏற்றி, மலர்தூவி நினைவேந்தல் கடைப்பிடித்தனர்.

இதில் பெங்களூர் திருவள்ளுவர் சங்க சந்திரமௌலி, எச்ஏஎல் தமிழ் மன்ற இராமகிருஷ்ணன், ஐடிஐ பெங்களூர் தமிழ் மன்ற ஆஞ்சநேயன், தன்னுரிமை மனமகிழ் மன்ற இராஜசேகர், எட்டாவது வள்ளல் எம்ஜிஆர் நற்பணி அமைப்பு குணசேகரன், தாய்மொழி கூட்டமைப்பு வரதராஜன், பார்த்திபன், மற்றும் சனத், கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்