முகப்பு Bengaluru தமிழுக்காவும் தமிழர் வாழ்வியல் மேம்பாட்டிற்கு உழைத்தவர் வணங்காமுடி: ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு புகழாரம்

தமிழுக்காவும் தமிழர் வாழ்வியல் மேம்பாட்டிற்கு உழைத்தவர் வணங்காமுடி: ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு புகழாரம்

141
0

பெங்களூரு, மே 18: தமிழுக்காவும் தமிழர் வாழ்வியல் மேம்பாட்டிற்கு உழைத்தவர் வணங்காமுடி என்று ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு புகழாரம் சூட்டினார்.

அண்மையில் மாரடைப்பாள் காலமான தமிழியக்கத்தின் அமைப்பு செயலாளரும் திராவிட இயக்க பற்றாளருமான பேராசிரியர் கு.வணங்காமுடிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) நடைபெற்றது. பேராசிரியர் சி.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். வணங்காமுடியின் திருவுருவ படத்தை தமிழ்நாட்டின் முன்னாள் சட்டபேரவை தொகுதி உறுப்பினர் கொ.வீ.நன்னன் திறந்து வைத்தார்.

கர்நாடக மாநில திராவிடர் கழக தலைவர் சானகிராமன், கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, ஓய்வு பெற்ற சுங்கத்துறை ஆணையர் கோ.மணிவாசகம், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், பெங்களூரு தமிழ்ச்சங்க துணைதலைவர் அமுத பாண்டியன், உலக தமிழ் கழக துணைதலைவர் துரைசெல்வன், புலவர் கார்த்தியாயினி, பேராசிரியர் சரஸ்வதி, இலுஷன் புத்தக நிலைய உரிமையாளர் சந்திரசேரன், ஏசுதாஸ், போர்முரசு கதிரவன் ஆகியோர் புகழுரை ஆற்றினர்.

பேராசிரியர் வணங்காமுடி திருவுருவ படத்திற்கு கர்நாடக மாநில திமுக பொருளாளர் கே.தட்சணாமூர்த்தி, கர்நாடக மாநில திமுக மகளிரணி செயலாளர் சற்குண இளமதி, நீலசந்திரா வார்டு செயலாளர் மு.மாணிக்கவேல், சிவகுமார், திராவிடர் கழக பரப்புரை குழு செயலாளர் முல்லைகோ, சுயமரியாதை சுடரொலி கைவலயம் பயிற்சி பாசறை நிர்வாகி ஆ.கரிகாலவளவன், பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகி சு.பாரி, பெரியாரிஸ்ட் கலைச்செல்வி, சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, கோ.கருணாநிதி, கவிஞர் திருநாவுக்கரசு, சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக விஞ்ஞானி டில்லிபாபு பேசும்போது, பேராசிரியர் வணங்காமுடி தமிழ் இலக்கிய எழுத்தாளராக மட்டுமில்லாமல், தமிழ்மொழியை அனைத்து மடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தீவிராக இருந்தார். இதற்காக நாள்தோறும் அதிகமான நேரத்தை ஒதுக்கியதுடன் முழுமையாக ஈடுப்பட்டார். இப்படி தமிழுக்காவும் தமிழர் வாழ்வியல் மேம்பாட்டிற்கு உழைத்தவர் அவர் தமிழுணர்வாளர்கள் உள்ளத்தில் நிலைத்திருப்பார் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்