முகப்பு Special Story ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

101
0

பெங்களூரு, நவ. 17: புட்டபர்த்தியில் நடைபெற உள்ள ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நவ. 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் துரோபதி முர்மு, துணை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

சென்னை மாகாணத்தில் அப்போது இருந்த புட்டபர்த்தியில் 1966 ஆம் ஆண்டில் நவ. 23 ஆம் தேதி ரத்னாகரம் பெத்த வெங்கட் ராயூ மற்றும் மீசரகண்டம்மா ஆகியோருக்கு பிறந்தவர் சத்யநாராயண ராயூ ஆவார். இவர்தான் பிற்காலத்தில் ஸ்ரீ சத்ய சாய் பாபா என்று பக்தர்களால் போற்றப்பட்டார்.

பெற்றோர்களுக்கு நான்காவதாக பிறந்தவர் சத்யநாராயண ராயூ. இவருக்கு மூத்த அண்ணன் ரத்னாகரம் சேஷம ராயூ, மூத்த சகோதரிகள் வெங்கம்மா, பர்வதம்மா மற்றும் தம்பி ஜானகிராமையா ஆவர்.

1940 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி புட்டபர்த்தி அருகில் உள்ள உரவகொண்டா என்ற சிறிய கிராமத்தில் அண்ணன் ஷேஷமா ராயூடுவுடன் வசிக்கும் போது, அவரது 14 வயதில் தேள் கொட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சுயநினைவை இழந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவரிடம் மாற்றம் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் சமஸ்கிருதம் படிக்காதபோது, அதில் வசனங்களை பாடல்களாக பாடத் தொடங்கி உள்ளார். 1940 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி சத்யநாராயண ராயூ தனது நண்பர்களுக்கு சர்க்கரை மிட்டாய் தயாரித்து அதனுடன் பூக்களையும் தனது நண்பர்களுக்கு பிரசாதமாக தயாரித்து வழங்கி உள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த அவரது தந்தை, நீ யார் என்று கேட்டப்போது, நான் சாய்பாபா என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவர் தன்னை சீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று கூறியுள்ளார். மகான், தெய்வம் என்று இன்றளவும் மக்களால் போற்றப்படுகிறது சீரடி பாபா, சத்யநாராயண ராயூ பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று குறிப்பிடத்தக்கது.

1944 ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் சாய்பாபாவின் பக்தர்களால் ஓர் கோவில் கட்டப்பட்டது. அதன் பிறகு 1948 ஆம் ஆண்டில் தொடங்கி, 1950 ஆண்டு வரை தற்போது புகழ்பெற்று விளங்கும் பிரஷாந்தி நிலையம் கட்டப்பட்டது. பிரஷாந்தி நிலையம் கட்டப்பட்டப் பிறகு பிரபலமடைந்த சாய்பாபாவை தேடி உலகம் முழுவதிலிருந்து பக்தர்கள் வர தொடங்கினர்.

அவரை பின்பற்றும் பக்தர்கள், சாய்பாபா தங்களின் வாழ்வில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திதாக கூறுகின்றனர். மேலும் புட்டபர்த்தியில் இலவச கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளை சாய்பாபா வழங்கினார். மனித குலத்திற்காக வறுமை, துன்பம், நோய் ஆகியவற்றை நீக்கி, “அன்பே மருந்து” என்ற தத்துவத்தை நடைமுறையில் கொண்டு வந்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. அவரது கருணையால், 1991 ஆம் ஆண்டு ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகம் உருவாகியது.

பிரஷாந்தி நிலையத்தில் தொடர்ந்து தியானம், சிறப்பு பூஜை செய்யப்பட்டாலும், அங்கு எங்கும் உண்டியல் வைப்பதில்லை. மாறாக விரும்பும் பக்தர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று, தாங்கள் விரும்பிய தொகையை, ஆஸ்ரமத்திற்கு வழங்கலாம். இதனை சாய்பாபா இறப்பதற்கு முன்பும், இறந்த பின் அவரது பக்தர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

சாய்பாபா, அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவையாற்று, எப்போதும் உதவுங்கள், எப்போதும் காயப்படுத்தாதே என்று தனது பக்தர்களிடம் கூறி, இதனை கடைபிடிக்க வலியுறுத்தி வந்தார். இதனை அவரது பெரும்பாலான பக்தர்கள் கடைபிடித்து, பக்தர்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

கடவுள் என அவரது பக்தர்களால் போற்றப்படும், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் விழா நிகழாண்டு நவ. 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புட்டபர்த்தியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சத்ய சாய்பாபாவின் பிறந்த நாளையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பே இலவச அன்னதானம் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகின்றது.

தொடந்து 10 நாட்களாக மேலாக கொண்டாடப்படும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நவ. 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளார். இதற்காக ஆஸ்ரமத்தின் அருகே உள்ள கிரிக்கெட் ஸ்டேயத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக புட்டபர்த்தியில் 200க்கும் மேற்பட்ட வரவேற்பு வ்ளைவுகள் வைக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பு உள்ளிட்டவைகளையும் மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குடியரசு தலைவர் துரோபதி முர்மு, துணை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு உள்ளிட்டோரும், பல மாநில ஆளுநர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

கொண்டாட்டத்தையொட்டி பிரஷாந்தி நிலையத்திற்கு பக்தர்கள் திரளாக வந்த‌ வண்ணம் உள்ளனர். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நாளில் சுமார் 5 ஆயிரம் பேர்க்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, புட்டபர்த்திற்கும் செல்லும் சாலைகள் புதிதாக போடப்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

சாய்பாபாவின் பிறந்த நாளையொட்டி புட்டபர்த்தியில் உள்ள சித்ரா நதிக்கரையில் சிறப்பு லேசர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கும் தொடங்கும் இந்த காட்சியில், சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு, ஆங்கிலம், இந்தியில் மொழிகளில் கூறப்படுகிறது. இதிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வருகிறனர். ஸ்ரீ சாய்பாபாவின் 100வது பிறந்த நாளையொட்டி, புட்டபர்த்தி நகரமே விழாகோலம் பூண்டுள்ளது. பிறந்த நாளையொட்டி, மிகச் சிறப்பான ஏற்பாடுகள் அனைத்து இடத்திலும் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்