பெங்களூரு, மார்ச் 11: ராஜாஜிநகரில் கடந்த 15 வருடமாக வாஸன் கண்மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு அளிக்கப்படும் உயர்தர கண் சிகிச்சை பெறவெளிநாட்டினர் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு வரும் கண் சம்மந்தப்பட்ட பார்வைக் குறைபாடு, மற்ற மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட கண்நோயாளிகள் இங்கு அளிக்கப்படும் அதி நவீன கண் சிகிச்சையினால் கண்பார்வை பெற்று மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
வெளிநாட்டுநோயாளிகள்:
சூடான் நாட்டிலிருந்து அண்மையில் 45 வயது ஆண் நபர் இந்தியாவில் பல்வேறு கண் மருத்துவமனைகளுக்கு சென்று கண் பார்வைக் கோளாறினால் அன்றாடம் செய்யும் பணிகளில் சிரமம் ஏற்பட்டது. இவர் ராஜாஜிநகர் வாஸன் கண் மருத்துவமனை கண்விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவஷிஷ் துபே மற்றும் கண்ணில் ஒளி விலகல் பிரச்சனை சரி செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவிகா சிங் ஆகியோர் கூட்டாக சூடான் நோயாளிக்கு வலது கண்ணில் அதிநவீன அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். கண்ணில் நிரந்தரமாக பொருத்தப்படும் அதிநவீன லென்ஸ் பொருத்தப்பட்டு பார்வை வெற்றிகரமாக பெறப்பட்டது.
கண்வங்கி:
இறந்தவர்களின் கண்விழிப்படலம் பெறப்பட்டு கார்னியல் கிராபிட்டிங் என அழைக்கப்படும் கார்னியல் மற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கென பிரத்யேகமாக பயிற்சி பெற்ற அதிநவீன மருத்துவர்களும் நவீன ஆபரேஷன் அரங்கங்களும் உள்ளன. பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் இருந்து கண் விழி வெண்படலம் பல வெளி கண்வங்கிகளில் இறந்தவர்களின் கண்கள் கொடையாக பெறப்பட்டு பாதுகாக்கப்பட்ட இடங்களில் இருந்து தேவையான நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு பார்வை கிடைக்க வாஸனில் தரமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

ரெட்டினாலேசர்:
பல வடிவமைப்புடைய ரெட்டினாலேசர் அண்மையில் நிறுவப்பட்டுள்ளது இது துல்லியமானதாகவும், அதிவேகமாகவும், சரியான இடத்தில் லேசர் கண்களில் பாய்ச்சி கண்விழித் திரையில் உள்ள நரம்புகளை செயல்பட செய்து மற்றபார்வை கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். இது நோயாளிகளுக்கு சாதகமாகவும், விளைவுகள் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
கர்நாடகபோக்குவரத்துகழகம் :
மத்திய, மாநில அரசு சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட வாஸன் கண் மருத்துவமனை கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ளவர்களுக்கு சிறப்பாக சேவை செய்து வருகிறது.
அண்மையில் கர்நாடக முதல்வரின் மூலம் அங்கீகாரம் பெற்ற கர்நாடக போக்குவரத்து துறை ஓட்டுனர்கள், பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கண் சிகிச்சை பெற ஒப்பந்தம் செய்ய்யப்பட்டது. இதன் மூலம், கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும் செவ்வாய்க்கிழமைகளில் வாஸன் கண் மருத்துவமனையில், 50 வயதைக் கடந்தவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்படுகிறது. 15 வயது குறைவான சிறுவர்கள், மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமைதோறும் செய்யப்படுகிறது. பள்ளி மாணவர்கள் அவர்களின் பள்ளி அடையாள அட்டையை காண்பித்து, இலவச பரிசோதனையை பெற முடியும். அதே போல ஏழைகள் 5 பேரை அடையாளம் கண்டு, வாஸன் கண் மருத்துவமனையில் மாதந்தோறும் இலவசமாக கண்புரைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.































































