பெங்களூரு, செப். 30: பெங்களூரு மாவட்ட ராஜ்புத் சபா சார்பில் நடைபெற்ற சிறப்பு சுமங்கலி பூஜையில் திரளாக பெண்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பூஜைக்கு தேவையான பொருள்கள் வழங்கப்பட்டது. பின்னர் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் சேலை, தாம்பூலம் வழங்கப்பட்டது.

பெங்களூரு வசந்த் நகரில் ராஜ்புத் சபா சார்பில் 36வது தசரா கொண்டாட்டங்கள் செப். 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ராஜபுத்திர குடும்பங்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து பல்வேறு சடங்குகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க தினமும் அரங்கிற்கு வருகை தந்து வருகின்றனர். இதில் சுமங்கலி பூஜை எனப்படும் சிறப்பு பூஜை செப்டம்பர் 29 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மகா சண்டிகா ஹோமம் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இறுதி நாளான அக்டோபர் 2 ஆம் தேதி பெண் தெய்வங்கள் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மற்றும் விநாயகர் சும்பிரமணியர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பிறகு ஹல்சூர் ஏரியில் கரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்புத் சபா சார்பில் பெங்களூரு வசந்த் நகரில் 36வது தசரா கொண்டாட்டங்களை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடக்கிறது.

இதில் ராஜபுத்திர குடும்பங்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து பல்வேறு சடங்குகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க தினமும் அரங்கிற்கு வருகை தந்து வருகின்றனர். இதில் சுமங்கலி பூஜை எனப்படும் சிறப்பு பூஜை செப்.29ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மகா சண்டிகா ஹோமம் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இறுதி நாளான அக்டோபர் 2 ஆம் தேதி பெண் தெய்வங்கள் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மற்றும் விநாயகர், சும்பிரமணியர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பிறகு ஹல்சூர் ஏரியில் கரைக்கப்படும் என சபாவின் தலைவர் அஜித்சிங் மற்றும் பொதுச் செயலாளர் பாலாஜிசிங் தெரிவித்தனர்.

விழாவில் ராஜ்புத் சபா துணைத் தலைவர் டி.ஆர். பாலாஜி சிங் உள்பட 16 உயர் நிர்வாக குழு உறுப்பினர்களும், மகளிர் அணியைச் சேர்ந்த துர்கா குமாரி, மதுமதிபாய், எம் ஜி சுலேகா சிங், கோமல் கே சிங் மற்றும் 14 பேர் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.































































