பெங்களூரு, அக். 1: ஜே பி நகர் 2வது ஸ்டேஜ் மாரேனஹள்ளி ஸ்ரீ தேவி சல்லாப்புரம்மா மற்றும் ஸ்ரீ தேவி ரேணுகா எல்லம்மா கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி சிறப்பு பூஜையில் ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதி எம் எல் ஏ ராமமூர்த்தி கலந்து கொண்டார். சிறப்பு பூஜையையொட்டி, கர்நாடக இசை கச்சேரி மற்றும் காளி நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது.

பெங்களூரு ஜே பி நகர் 2வது ஸ்டேஜ் மாரேனஹள்ளி ஸ்ரீ தேவி சல்லாப்புரம்மா மற்றும் ஸ்ரீ தேவி ரேணுகா எல்லம்மா கோவிலில் செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடக்கிறது.

இதனையடுத்து செப்டம்பர் 22ம் தேதி முதல் சல்லாப்புரம்மா மற்றும் ரேணுகா எல்லம்மா சிலைகளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 8வது நாளான செப்டம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை சல்லாப்புரம்மா மற்றும் ரேணுகா எல்லம்மாவிற்கு துர்காதேவி அலங்காரம் செய்யப்பட்டது.

சிறப்பு பூஜையை திருமதி வெங்கடம்மா, திரு பீமையா குடும்பத்தினர் செய்திருந்தனர். பூஜைக்கு ஜெயநகர் சட்டப்பேரவை தொகுதி எம் எல் ஏ ராமமூர்த்தி, முன்னாள் கார்பரேட்டர் சந்திரசேகர் ராஜு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜையையொட்டி, கர்நாடக இசை கச்சேரி மற்றும் காளி நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது.































































