முகப்பு Politics மைசூரு மாகாண‌த்திற்கு கர்நாடகம் என்ற பெயர் வைக்க வேண்டும் என்று முன்மொழிந்தவர் பேரறிஞர் அண்ணா: ந.இராமசாமி

மைசூரு மாகாண‌த்திற்கு கர்நாடகம் என்ற பெயர் வைக்க வேண்டும் என்று முன்மொழிந்தவர் பேரறிஞர் அண்ணா: ந.இராமசாமி

130
0

பெங்களூரு, பிப். 3: மைசூரு மாகாண‌த்திற்கு கர்நாடகம் என்ற பெயர் வைக்க வேண்டும் என முன்மொழிந்தவர் பேரறிஞர் அண்ணா என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக அலுவலகம், கலைஞரகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்ற‌து.

நிகழ்வில் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் அமைத்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு, ந.இராமசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி எனது தலைமையில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தி, வீரவணகத்தை தெரிவித்துக் கொண்டோம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுக தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து கர்நாடகத்தின் மீது பற்றும், பாசமும் கொண்டவர். திமுக வரலாற்றிலேயேகர்நாடகத்தைச் சேர்ந்த ஹுசேன் அவர்களை தலைமை செயற்க்குழு உறுப்பினராக அண்ணா நியமித்தார். அதுமட்டுமின்றி, 1956, 1958 ஆம் ஆண்டுகளில் பெங்களூரு மாவட்ட மாநாட்டில் அண்ணா கலந்து கொண்டார். 1956 ஆம் ஆண்டு தான் கலந்து கொண்ட மாநாட்டில் மைசூரு மாகாண‌த்திற்கு கர்நாடகம் என்ற பெயர் வைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2 வது மாநாட்டிலும் அந்த தீர்மானத்தை வலியுறுத்தினார். அந்த தீர்மானத்தை 1972 ஆம் ஆண்டு தேவராஜ் அர்ஸ் முதல்வராக‌ இருந்த ஆட்சியில், அப்போதனைய திமுக அமைப்பாளராக இருந்த திராவிட மணி அவர்கள் எம்.எல்.ஏவாக இருந்தபோது, அந்த தீர்மானத்தை வழிமொழிந்த பெருமை அறிஞர் அண்ணாவிற்கும், கர்நாடக மாநில திமுகவிற்கும் சாரும். அண்ணா தனது முயற்சியால் கர்நாடகத்தில் திமுக வளர்வதற்கும், இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கும், தமிழ் சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்கும், தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கும் அயராது பாடுபட்டார்.

அவர் பெருமைக்குரியவர், போற்றுதலுக்குரியவர், வணக்கத்திற்குரியவர், அவரை வணங்குவதில் நாங்கள் பெருமைபடுகிறோம். அண்ணா தொடங்கிய மாநில கட்சியின் போராட்டம், இன்று அகில இந்திய அளவில் பரவி உள்ளது. அதே போல் இருமொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு உள்ளிட்டவை இந்திய முழுவதும் பரவும் அளவிற்கு வித்திட்டவர், வளர்த்தெடுத்தவர், ஆளாக்கியவர் அண்ணா அவர்கள். அதன் நன்றி கடனாக அவரது நினைவு நாளில் போற்றி, வணங்கி, எங்கள் மரியாதையை செலுத்திக் கொள்கிறோம் என்றார்.

நிகழ்வில் கர்நாடக மாநில திமுகவின் துணை அமைப்பாளர் ஜே.ராமலிங்கம் முன்னாள் நிர்வாகிகள் ஏடி ஆனந்தராஜ் .கே.எஸ்.சுந்தரேசன், தொமுசா செயலாளர் சிவசங்கரன், துணைத் தலைவர் ஜி.ஜெயபால், கோ. கருணாநிதி ஜெயபால்மகளிர் அணி அமைப்பாளர் சற்குண இ மதி என் கவிப்பிரியா எஸ் அசோக் குமார் என். அருண்குமார், கிளைச் செயலாளர் ஹரிஹரமித்ரன், ஏ ராஜேந்திரன், சுனில், கன்னியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்