முகப்பு Bengaluru முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் கர்நாடக தமிழர்கள் கீழடி பயணம்

முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் கர்நாடக தமிழர்கள் கீழடி பயணம்

82
0

பெங்களூரு, ஏப். 16: தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவருமான முனைவர் எஸ். டி. குமார் அவர்கள் தலைமையில் வரும் 18.4.25 அன்று பெங்களூரிலிருந்து பெங்களூரு திருவள்ளுவர் சங்க நிர்வாகிகள், கர்நாடக தமிழ் மக்கள் இயக்க துணைத்தலைவர் பண்முகன், தாய்மொழி கூட்டமைப்பு டி. முனுசாமி, பெங்களூரு தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, சந்திரிகா, எச்ஏஎல் தமிழ் மன்ற செயலாளர் பாலாஜி, பெங்களூரு தமிழ் மன்ற துணைச் செயலாளர் ஆஞ்சநேயன், எம்ஜிஆர் மன்ற சடகோபன், சாம்ராஜ் நகர் தமிழ்ச் சங்க சூரியா, பேராசிரியர் சரளா, ஊடகவியலாளர் க.தினகரவேலு, பெங்களூர் வள்ளலார் சங்க பிரதிநிதிகள், மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட 35 பேர் கொண்ட குழுவினர் பயணம்.

19.4.25 அன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சங்கம் வரவேற்பைப் பெற்று, ஐயன் திருவள்ளுவர் சிலை முன்பு திருக்குறள் முற்றோதல் முடித்து ஐயன் திருஉருவ சிலைக்கு மரியாதை செய்து, 20.4.25 அன்று மதுரை தமிழ் அமைப்புகள் வரவேற்பு பெற்றுபெற்று, தமிழ் அமைப்பினர் வழிகாட்டுதலில், கீழடி பயணம் செய்து தமிழனின் தொல் பெருமை கண்டு மகிழ்ந்து, அன்று இரவு 8 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு பெங்களூர் வந்து சேருகிறோம். என்று தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவருமான எஸ். டி. குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்