முகப்பு Hospital மாறுகண் சிகிச்சை: வாஸன் கண் மருத்துவமனை சாதனை

மாறுகண் சிகிச்சை: வாஸன் கண் மருத்துவமனை சாதனை

100
0

பெங்களூரு, நவ. 15: மாறுகண் சிகிச்சை முறையில் வாஸன் கண் மருத்துவமனை சாதனை புரிந்து வருகிறது.

மாறுகண் பொதுவாக 2 கண்களும் வெவ்வேறு திசைகளைப் பார்க்கும். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் இந்த குறைபாடு ஏற்படும்.

ஒரு கண் நேராக பார்க்கும் போது மற்றொரு கண்ணானது திரும்பிய நிலையிலோ, மேல் நோக்கியோ, கீழ்நோக்கியோ இருக்கும். சிலருக்கு இது எப்போதும் வேண்டுமானாலும் ஏற்படும். ஒரு சிலருக்கு அவ்வப்போது ஏற்படும். ஆரம்ப நிலையிலே குணப்படுத்தாவிட்டால் அந்த கண் சோம்பேறி கண்ணாகும் அபாயமும் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது.

இளம் வயதிலேயே மாறுகண் குறைபாட்டிற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் பார்வை இழப்பை தடுக்கலாம்.
மாறுகண் அதிர்ஷ்டம் என்று சில தவறான எண்ணம் கொண்டுள்ளனர். மாறுகண் என்பது பார்வை இழப்பை உருவாக்கும் சூறைபாடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மாறுகண் வர காரணங்கள்:
குடும்பத்தில் யாருக்கேனும் மாறுகண் பார்வைத்திறன் (Refractive Error) குறைபாடு இருத்தல் பலவீனமான கண் தசைகள், கண்புரை, கண்ணீர் அழுத்தம், பார்வை திறன் குறைபாடு காரணமாக மங்களான பார்வை ஏற்படுதல்.
கண்ணில் அடிபடுதல், கண் நரம்பில் ஏற்படும் சிக்கல்கள் காரணமேயின்றி கூட (Idiopathic) ஏற்படலாம்.

மாறுகண் அறிகுறிகள்:
வெவ்வேறு திசைகளை கண்கள் பார்த்தல்,
ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் மோசமான பார்வை,
பிரகாசமான ஒளியைப் பார்க்கும் போது ஒரு கண்ணை மூடிக்கொள்ளுதல்,
சில நேரங்களில் தலையை சாய்த்தபடி பார்த்தல்,
இரட்டை பார்வை ஆகியவை ஆகும்.

சிகிச்சை முறைகள்:
கண்ணாடி அணிதல்,
கண் பயிற்சிகள்,
இயல்பான கண்ணை மறைக்கும் சிகிச்சை,
அறுவை சிகிச்சை.

கண்ணாடி அணிதல்:
சரி செய்யப்படாத பார்வைத் திறன் குறைபாடுகளால் மாறுகண் ஏற்பட்டால் கண்ணாடி அணிய வேண்டிய தேவை ஏற்படும். I

கண் பயிற்சிகள்:
சிறிய அளவில் மாறுகண் இருந்தால் சில கண் பயிற்சிகள் மூலம் கண்களைச் சுற்றியுள்ள தசைகளை வலிமையாக்க முடியும்.

இயல்பான கண்ணை மறைக்கும் சிகிச்சை:
இரண்டு கண்களிலும் சமமான பார்வை ஏற்படுத்தவும் கண்களின் அசைவுகளை மேம்படுத்தவும். இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது சோம்பேறி கண் எனும் குறைபாட்டை தடுக்கிறது.

மாறுகண்னுக்கான அறுவை சிகிச்சை :
கண்களை நேர்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது .இதன் மூலம் இரண்டு கண்களாலும் ஒரே திசையை பார்க்கும். ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் பைனாகுலர் விஷன் எனும் பார்வை நிலையை டையலாம்.அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் பார்வை பாதிக்கப்படாது.

அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டியவைகள்:
அறுவை சிகிச்சைக்கு முன் சில கண் பரிசோதனைகளை செய்தாக வேண்டும்
ஜுரம், ஜலதோஷம், இருமல் முதலிய நோய்கள் குழந்தைகளுக்கு இருந்தால் அவை குணமான பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அறுவை சிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக உணவருந்தவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது

அறுவை சிகிச்சையின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் :
ஒரு சில மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்யப்படும்,அறுவை சிகிச்சைக்கு முன்னதாக மயக்கமருந்து கொடுக்கப்படும் .இதனால் வலியால் அங்கும் இங்கும் நகர மாட்டார்கள். எனவே குழந்தைகள் தூங்கி விடுவார்கள்.

கண்ணின் வெள்ளை நிறப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.
கண் தசைகள் இருக்கும் இடத்திலிருந்து முதலில் அவை அகற்றப்படும். புதிய இடத்தில் தசைகள் மாற்றி அமைக்கப்படும்.இதனால் ஒரே திசையை இரண்டு கண்களாலும் பார்க்க முடியும்.

தசைகள் நிலையாக இருப்பதற்கு சிறு தையல்கள் போடப்படும் அறுவை சிகிச்சைக்கு பிறகு உங்களால் அதை பார்க்க முடியாது சில நாட்களில் தழும்பு /தையல் குறிகள் மறைந்துவிடும்.

அறுவை சிகிச்சைக்கு பின்:
பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓரிரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதும் வீட்டுக்கு
சென்ற பிறகு கூடுதல் சிகிச்சை தேவைப்படலாம்.உதாரணத்திற்கு சில குழந்தைகளுக்கு இயல்பான கண்ணை மறைக்கும் சிகிச்சை தேவைப்படலாம். சிலருக்கு கண் பயிற்சி தேவைப்படலாம். சிலருக்கு கண்ணாடி தேவைப்படலாம்.

எனவே இந்த மாறுகண் சிகிச்சை தேவைப்படுவோர் வாஸன் கண் மருத்துவமனையை அணுகி அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு மாறுகண் அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் பருள் மற்றும் டாக்டர் நிஷந்த் எடுத்துரைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்