பெங்களூரு, நவ. 14: கருநாடக மாநில திமுக சார்பில் நவ. 17 ஆம் தேதி முரசொலி செல்வம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் உருவப்படம் மாநில திமுக சார்பில் திறப்பு நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் நவ. 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக கலைஞரக வளாகம் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் மாநில திமுக நிர்வாகிகள், முன்னாள் மாநில திமுக நிர்வாகிகள் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.































































