பெங்களூரு, டிச. 14: மனிதனுக்கு புத்தகம்தான் திசை, திசைகாட்டி என்று எழுத்தாளரும், இலக்கிய பேச்சாளருமான, சொற்கோ பாரதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் கடந்த டிச. 5 ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி வரை கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 9 ஆம் நாளான சனிக்கிழமை (டிச. 13) நடைபெற்ற சிந்தனைக்களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திசையும், திசைகாட்டியும் என்று தலைப்பில் அவர் பேசியது:
விலங்கிற்கும் மனிதற்கும் பசி, காமம், வாழ்கை முறை, உண்ணும் முறை, பண்பாடு, கலாசாரம், தொடர்பு, உறவு உள்ளிட்டவைகள் பொது, ஆனால் வேறுபாடு உண்டு. இறைவன் தான் ஆதமையும், ஏவாளையும் படைத்தான் என்று கூறப்படுகிறது. என்றாலும் விஞ்ஞானம் என்ன சொல்கிறது. குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தான் என்று கூறுகிறது.
மனித குரங்கு உள்ளிட்ட குரங்களுக்கு கையில் கட்டை விரல் சேர்ந்திருக்கும், விலகி இருக்காது. ஆனால் விலங்கிற்கு இல்லாத மனிதனுக்கு உள்ள தனிச் சிறப்பு என்னவென்றால் மனிதனுக்கு கட்டை விரல் விலகி இருக்கும். விலங்கிலிருந்து மனிதன் வேறுபட்டவன் என்பதனை இயற்கையும், உலகிற்கும் சொல்வதற்காகத்தான் மனிதர்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டுவது வழக்கம்.

கட்டை விரல் ஒட்டி இருந்தால் இருக்கமாக எதையும் பிடிக்க முடியாது. விலகி இருந்தால் எதையும் இருக்கமாக, உறுதியாக பிடிக்க, பற்ற முடியும். விலகிற்கும், மனிதனுக்கும் உள்ள மற்றொரு வித்தியாசம் மனிதனுக்கு முதுகெலும்பு நிமிர்ந்திருக்கும். முன்னம் கால்கள் கைகளாக மாறி உள்ளது. உடலில் தேவையற்ற பகுதிகளில் உள்ள ரோமமெல்லாம் விழுந்தது.
இவையெல்லாம் குரங்கிலிருந்து விலகி மனிதனை அடையாளப்படுத்தியவை. ஆனால் துல்லியமாக குரங்கில் இருந்து மனிதனை பிரித்தது எனுவென்றால். அது மொழிதான். அதில் சந்தேகமென்றால், எந்த குரங்கிடமும், புத்தகத்தை கொடுத்துப் பாருங்கள். தன்னையும் மனிதனையும் பிரித்த புத்தகங்கள் மீது குரங்கிற்கு உள்ள கோபத்தைமும், வித்தியாசமும் தெரிந்துவிடும்.
மனிதர்களுக்கு திசையும், திசைகாட்டியுமாக உள்ள மொழியை சுமந்திருக்கும் புத்தகங்கள் கையில் சுமந்திருந்தால் அது மனிதன். இல்லாவிட்டால் அது விலங்கு என தெரிந்துவிடும். யாரும் பிறக்கும் போது மனிதர்களாக பிறப்பதில்லை. மனித வடிவில பிறக்கிறோம். மனிதர்களாக மாறுவது பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்தான்.
ஒரு மனிதன் வாசிப்பால், பண்பால், செயலால், கூட்டுறவால், ஒற்றுமையால் தன்னை உயர்த்திக் கொள்வான். அப்படி அவனை உயர்த்திக் கொள்வதகான ஒரே படி, ஆயுதம், கருவி புத்தகம்தான். அதுவே திசை, அதுவே திசைக்காட்டி என்றார்.
சாதி, மதம் கடந்து தமிழர் என்ற உணர்வோடு வாழ வேண்டும்: சன் நியூஸ் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரன் அழைப்பு

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சன் நியூஸ் தொலைக்காட்சி தலைமை செய்தி ஆசிரியர் மு. குணசேகரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசும் போது, தமிழ்நாட்டில் புத்தக திருவிழா நடத்துவது நியாயமாக இருந்தாலும் வெளிமாநிலமான கர்நாடக மாநிலத்தில் நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் தமிழ் புத்தக திருவிழா நடத்துவது பெருமையாக உள்ளது.
கடந்த 90ம் ஆண்டுகளில் பெங்களூரு நகரம் மற்றும் ஊரக பகுதியில் கடைகளில் பெயர் பலகைகளில் கன்னடம், தமிழ், ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இங்கும் இருந்தது.
தமிழ் என்ற ஒரு ஒற்றை சொல் தான் நம்மை இணைத்து இருக்கிறது. ஒரு மொழியை நேசிப்பார்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பார்க்க வேண்டும். சிறுபான்மை மொழி பேசும் மக்கள் அதிகாரத்தில், அரசியலில், பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில் மேலோங்கி இருந்தால் மட்டுமே வளர்ச்சியாக இருக்கும்.
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாய் தமிழ்நாட்டின் இருந்து யார் வந்தாலும் அவர்களை அன்புடன் வர வேற்கும் உள்ளம் கொண்டவர்கள். அண்டை மாநிலத்தில் வாழ்ந்தாலும் நமது மொழி மீதான பற்று, தமிழ் மொழியை ஒவ்வொரு தமிழர் வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இது வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய ஒன்று. சாதி, மதம், இனம் வேறுபாடு கலைந்து தமிழர் என்ற பெருமிதத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். சிந்தனைகளம் நிகழ்வில் கர்நாடக அரசின் பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல், முத்திரைத்தாள்துறை ஆணையர் எம்.பி.முல்லை முகிலன் தலைமை வகித்தார். ஜேசுதாஸ் வரவேற்புரையும், க.தினகரவேலு நன்றியுரையும் ஆற்றினர்.
முன்னதாக தமிழ் புத்தக திருவிழாவில் பெங்களூரு தன்னுரிமை மனமகிழ் மன்றம் பெருமையுடன் வழங்கியம ” உஷாரய்யா உஷாரு” என்ற விழிப்புணர்வு நாடக அரங்கேற்றம் நடந்தது. நாடகத்திற்கு கதை, வசனம் மற்றும் இயக்கம் வேலுமணி மேற்கொள்ள மேடை நிர்வாகத்தை க. ராஜசேகர் செய்து இருந்தார்.
நாடகத்தில் தொடக்க நகைச்சுவை உணர்வுடன் இருந்தாலும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை வசனங்கள் மூலம் சிறப்பாக நடித்து காட்டி மேடை கலைஞர்கள் அசத்தினர். இந்த காலகட்டத்தில் சதிக்காரர்கள், மோசடி பேர்வழிகள் எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள். அவர்களின் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை நாடகத்தின் மூலம் அரங்கேற்றியது. அது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழ்ப் புத்தகத் திருவிழா இன்று நிறைவு :பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 42 பேருக்கு தமிழ் ஆளுநர் விருது வழங்கி கௌரவிப்பு
பெங்களூரு, டிச. 14: பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த 42 பேருக்கு தமிழ் ஆளுமை விருதும், திராவிட இயக்க மூத்த முன்னோடி வீ.மு.வேலுவுக்கு தமிழ் பெருந்தகை விருதும் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
கடந்த 9 நாட்கள் நடைபெற்ற தமிழ் புத்தக திருவிழா 10வது நாளில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) நிறைவு பெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவுக்கு கர்நாடக மாநில கூடுதல் காவல் துறை தலைவர் எஸ்.முருகன் தலைமை வகிக்கிறார். மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை முதன்மைச் செயலாளர் விருது வழங்கி கௌரவித்து, பேருரை ஆற்றுக்கிறார்.
விழாவில் சங்க துணைத்தலைவர்கள் அ.செந்தில்நாதன், வி.வெங்கடேசன், துணை செயலாளர்கள் சி.தண்டபாணி, ஆர்.எம்.இராஜேந்திரன், பொருளாளர் க.தினகரவேலு முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில முதன்மை தலைமை வன பாதுகாவலர், மேலாண் இயக்குனர் எஸ்.வெங்கடேசன் கலந்து கொள்கிறார். டெஸ் சால்ஸ் செமிகன்டக்டர் நிறுவனர் டாக்டர் வி.வீரப்பன், தினச்சுடர் நாளிதழ் ஆசிரியர் பா.தேனமுதன், எழுத்தாளர் கிரித்திகாசரண் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
அதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு துறைகளில் சாாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. பெங்களூருவில் வாழும் 105 வயது திராவிட இயக்க மூத்த முன்னோடி வீ.மு.வேலுவுக்கு கர்நாடக தமிழ்ப் பெருந்தகை விருது வழங்கப்படுகிறது. பேராசிரியர் சீனிவாசன், பேராசிரியர் ஆரோக்கியமேரி, பேராசிரியர் சி.கிருஷ்ணகுமார், தேவகி நீலகண்டன், சி.துரைசாமி, மா.மினிபாய், பிரேமா வின்சென்ட், பேராசிரியர் தி.சரஸ்வதி, பேராசிரியர் ந.கிருஷ்ணமூர்த்தி, க.இராஜேஷ்வரி, ப.விஷ்ணுகுமார், இரா.மைக்கேல், மா.விசயபூபதி, ப.அரசு, துரைசெல்வன், த.கோவலன், எஸ்.வி.ஆர்.மூர்த்தி, தனசீலன், ஆ.உதயகுமார், பொ.மதியழகன், தி.நரசிம்மமூர்த்தி. ஏ.கமலகண்ணன், நரசிம்மன் பழனி, எஸ்.சங்கரன், எல்.மேகநாதன், என்.வெங்கடேசன், வி.கிப்சன், பாபு.கே.,
ஆ.சுந்தரமுருகேசன், நாகூரு ரோஜா, மு.சானகிராமன், ப.விஸ்வநாதன், மொ.பெரியசாமி, சம்பத் இராமானுஜம், கிருத்திகாதரன், சரவணன், பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், எம்.பி.சாமி, ஆர்.ராஜசேகரன், மரியா பிரான்சிஸ், எஸ்.எம்.பழனி ஆகிய 42 பேருக்கு கர்நாடக தமிழ் ஆளுமை விருது வழங்கப்படுகிறது. தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை உள்பட தமிழ் அமைப்புகள், தமிழ் பள்ளி, கல்லூரிகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. விழா தொடக்கத்தில் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ.வீ.மதியழகன் வரவேற்க, நிறைவில் சங்கத் தலைவர் முத்துமணி நன்னன் நன்றியுரை ஆற்றுகிறார்.































































