முகப்பு Bengaluru பெங்களூரில் 269-வது பாவாணர் பாட்டரங்கம் ‌

பெங்களூரில் 269-வது பாவாணர் பாட்டரங்கம் ‌

80
0

பெங்களூரு, பிப். 9: பெங்களூரில் 269- வது பாவாணர் பாட்டரங்கம் பிப். 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 269-வது பாவாணர் பாட்டரங்கம் நடைபெற்றது

அறிவியல் ஆற்றல் அறி என்னும் பொருண்மையில், பகுத்தறிவுப் பாவலர் மும்பை நா.நம்பிராஜன் அவர்களின் தலைமையில், பெங்களூர் தமிழ் மன்றத் தலைவர் டாக்டர் இரா.பாஸ்கரன், பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவர் முனைவர் எஸ்.டி. குமார் ஆகியோர் முன்னிலையில், பெங்களூர் தமிழ் மன்றச் செயலாளர் கு.மாசிலாமணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பாவாணர் பாட்டரங்கத் துணைப் பொறுப்பாளர், பொற்கிழிப் பாவலர்.கொ.சி.சேகர் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.

பாட்டரங்கத் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப் பட்டது. தமிழ்ச் செம்மல் க. பன்னீர் செல்வம், பாவலர். சு.சதாசிவம், பாவலர் இராம தியாகராசன், தமிழ் மாமணி வே. அரசு, பாவலர். சி.நடேசன், பைந்தமிழ்ப் பாவலர். மதலைமணி, இனமானப் பாவலர் தனம் அ. வேளாங்கண்ணி, சொல்லரசி – பாவலர் வீணைதேவி, பாவலர் ஏவியார், பொற்கிழிப் பாவலர் கொ.சி.சேகர், பாவலர் மா.பாஸ்கர், பாவலர் பி.அந்தோணிசாமி, பாவலர். இரா தேன்மொழி, பாடலாசிரியர். தேன்மொழியன் உட்பட பலர் பாக்களை அரங்கேற்றினர்.

பாட்டரங்கத்தில் மல்யாத்திரி, பி.சீனிவாசன், அசோகன், .ஜெயபால், .கா.சி.ஆஞ்சநேயன், பாவலர் பி.கார்த்திகேயன், ஆ.இலாரன்சு, அமலோர்பவ மேரி உள்ளிட்டப் பலர் சுவைஞர்களாகப் பாக்களைச் சுவைத்தனர். பாட்டரங்கம் நடைபெறுவதற்கு முன்னர் தமிழ்ச் செம்மல் க. பன்னீர்செல்வம் அவர்கள் எழுதிய நாற்பதாவது நூலான புகழ்மிகு புதுவை என்ற பயணக் கட்டுரை நூல் வெளியிடப்பட்டது.

பெங்களூர் தமிழ் மன்றத் தலைவர் டாக்டர் இரா.பாஸ்கரன் அவர்கள் நூலை வெளியிட, முதற் படியை ஆயிரம் ரூபாய் வழங்கி நூலைப் பெற்றுக் கொண்டார் பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவர் முனைவர். எஸ். டி. குமார் அவர்கள். நூலை வெளியிட்டப் பெங்களூர் தமிழ் மன்றத் தலைவர், டாக்டர் இரா. பாஸ்கரன் அவர்களும், நூலின் முதற் படியைத் தொகை வழங்கிப் பெற்றுக் கொண்ட பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவர் முனைவர். எஸ்.டி. குமார் அவர்களும் நூலாசிரியரைப் பற்றிப் பாராட்டி, வாழ்த்திப் பேசினர்.

பாவாணர் பாட்டரங்க இயக்குநர், மரபுப் பாவேந்தர். நெருப்பலையார். இராம. இளங்கோவன். அவர்கள் நூலைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். பாவாணர் பாட்டரங்கத் துணைப் பொறுப்பாளர், பொற்கிழிப் பாவலர். கொ.சி. சேகர் அவர்கள் தலைமைப் பாவலரைப் பற்றி அறிமுக உரையாற்றினார்.

புகழ்மிகு புதுவை என்ற நூலின் ஆசிரியரும், திருமண நாள் கொண்டாடிய தமிழ்ச் செம்மல்.க. பன்னீர்செல்வம் அவர்களுக்குப் பாவாணர் பாட்டரங்கம் வழியாகவும், பெங்களூர் தமிழ் மன்றம் வழியாகவும் நல்லாடைகள் அணிவித்து நூற் பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல், பிறந்த நாள் கொண்டாடிய பாவலர். மா.பாஸ்கரன் அவர்களுக்குப் பாவாணர் பாட்டரங்கம் வழியாக நல்லாடை அணிவித்து நூற் பரிசும் வழங்கப்பட்டது.

நூலாசிரியர் தமிழ்ச் செம்மல்.க. பன்னீர்செல்வம் அவர்கள், நூலை வெளியிட்டப் பெங்களூர் தமிழ் மன்றத் தலைவர், டாக்டர். இரா. பாஸ்கரன் அவர்களுக்கும், நூலின் முதற் படியைத் தொகை வழங்கிப் பெற்றுக் கொண்ட பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவர். முனைவர் எஸ்.டி.குமார் அவர்களுக்கும், நூலைப் பற்றி ஆய்வுரை வழங்கிய மரபுப் பாவேந்தர். நெருப்பலையார். இராம இளங்கோவன். அவர்களுக்கும், பாவாணர் பாட்டரங்கத் துணைப் பொறுப்பாளர், பொற்கிழிப் பாவலர். கொ. சி. சேகர் அவர்களுக்கும் பயனாடைகள் அணிவித்து நூற் படிகளை வழங்கினார்.

பாவலர்களுக்கும் சுவைஞர்களுக்கும் புகழ்மிகு புதுவை என்ற நூலின் ஆசிரியரும், திருமண நாளைக் கொண்டாடிய தமிழ்ச் செம்மல் க. பன்னீர்செல்வம் அவர்கள் இனிப்பும் காரமும், அவருடைய நூலையும், பிறந்த நாள் கொண்டாடிய பாவலர் மா.பாஸ்கர் அவர்கள் அடுமனை இனிப்பும் வழங்கினர். பாட்டரங்க இறுதியில் பெங்களூர் தமிழ் மன்றத் துணைத் தலைவர் பாவலர் சு.சதாசிவம் அவர்கள் நன்றியுரை ஆற்றப் பாவாணர் பாட்டரங்கம் இனிதே நிறைவுற்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்