பெங்களூரு, ஜன. 28: கர்நாடக மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பிப்.3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக அலுவலகம், கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில், பிப். 3 ஆம் தேதி காலை 10 மணியளவில் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் அமைத்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாநில திமுக நிர்வாகிகள், முன்னாள் மாநில திமுக நிர்வாகிகள், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், இலக்கிய அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொ.மு.ச பேரவை நிர்வாகிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்துவர்.
நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.































































