முகப்பு Politics நவ‌. 10ல் கர்நாடக‌ திமுக சார்பில் பவள விழா-முப்பெரும் விழா சிறப்புக் கூட்டம்: கருநாடக, தமிழ்நாடு...

நவ‌. 10ல் கர்நாடக‌ திமுக சார்பில் பவள விழா-முப்பெரும் விழா சிறப்புக் கூட்டம்: கருநாடக, தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பு

121
0

பெங்களூரு, அக். 29: கருநாடக மாநில திமுக சார்பில் கழக பவள விழா-முப்பெரும் விழா சிறப்புக் கூட்டம் நவ. 10 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3-மணி அளவில் பெங்களூரு, ராமச்சந்திரபுரம், சாய்பாபா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் கருநாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ், தமிழ்நாடு அமைச்சர் அர.சக்ரபாணி பங்கேற்கின்றனர்.

விழாவில் கட்சியின் இருவண்ணக் கொடியை மாநில திமுக துணை அமைப்பாளர் ஜி. இராமலிங்கம் ஏற்றுகிறார். சிறப்புக்கூட்டத்தில் இலக்கிய அணி செயலாளர் போர்முரசு கதிரவன் விழா துவக்க உறையாற்றுகிறார். திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மு.இராஜசேகர் வரவேற்புரை ஆற்றுகிறார்.

கருநாடக மாநில தி.மு.க அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில், மாநில நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள், வழக்கறிஞரணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், இலக்கிய அணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் முன்னிலையில் 2024-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படும்.

பெரியார் விருது திருமதி வெண்ணிலா கதிரவன் அவர்களுக்கும், அண்ணா விருது கே.எஸ்.சுந்தரேசன், கலைஞர் விருது தங்கவயல் பொன்.சாரங்கபாணி, பேராசிரியர் விருது ஏ.டி.ஆனந்தராஜ், மு.க.ஸ்டாலின் விருது தங்கவயல் கு.ஆதித்தன், முரசொலி மாறன் விருது க.நாராயணசாமி, உதயநிதி ஸ்டாலின் விருது இளைஞரணி துணை அமைப்பாளர் முருகானந்தம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

விழாவில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்ரபாணி, கருநாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கு கொள்கின்றனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தே.மதியழகன், எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மேற்கு திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மன்ற மேயர் எஸ்.எ.சத்யா, தலைமை இலக்கிய அணி பொருளாளர் சந்திரபாபு, திருமதி லேகா இந்திரா குமாரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.கிரி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். கருநாடக மாநில முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் வி.ஸ்.மணி நன்றியுரை ஆற்றுகிறார்.

oppo_1024

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்