முகப்பு Bengaluru தை பிறந்தால் வழி பிறக்கும்‍, தமிழர்கள் வாழ்க்கை சிறக்கும்: ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ்

தை பிறந்தால் வழி பிறக்கும்‍, தமிழர்கள் வாழ்க்கை சிறக்கும்: ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ்

59
0

பெங்களூரு, ஜன. 8: தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மொழியை மறக்காமல் வாழ வேண்டும். நமது முன்னோர்கள் கூறியது போல், தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழர்கள் வாழ்வு சிறக்கும் என்று பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிக்கல் வாரிய தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் தெரிவித்தார்.

கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் இவ்வாண்டிற்கான நாட்காட்டி வெளியிட்டு விழா பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. நாட்காடியை ராம்பிரசாத் மனோகர் வெளியிட புலவர் கார்த்தியாயினி, ஓய்வு பெற்ற சுங்கத்துறை ஆணையர் கோ.மணிவாசகம், சிறுமலர் பள்ளி தாளார் டாக்டர் மதுசூதனபாபு, கர்நாடக மாநில திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள் ந.இராமசாமி, போர்முரசு கதிரவன் ஆகியோர் பெற்று கொண்டனர். சற்குண இளமதி, எழுத்தாளர் ஔிமலரவன், புலவர் ப.திருநாவுக்கரசு, கவிஞர் திருநாவுக்கரசு, ராஜசேகர், ராஜகுரு, புலவர் கார்த்தியாயினி, வெண்ணிலா, சிவகனி, கவிஞர் திவ்யா, சங்கரதாஸ், ரகுராமன், தென்மொழியான், சிவகுமார், ஜேசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்காட்டி வெளியிட்டு ராம்பிரசாத் மனோகர் பேசும்போது:கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. நான்காவது புத்தக திருவிழா நடத்தி பத்து நாட்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டாவது விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இதுபோல் சங்கிலி போல் இயங்கினால் மட்டுமே தமிழை வளர்க்க முடியும்.

நாம் வாழும் காலத்தில் தமிழ் மொழியை வளர்க்காமல் விட்டால், எதிர்காலத்தில் தமிழ் அடையாளம் இல்லாமல் போய்விடும். அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்காமல் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்துடன் வாழ வேண்டும். நாம் வாழும் கால‌த்தில் தமிழ் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். நமது பண்பாட்டை காப்பதுடன் நமது பிள்ளைகளை கல்வியாளர்களாக உருவாக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வியல் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். வரும் தைத்திங்கள் முதல் நாளாம் தமிழர்களின் திருநாள் பொங்கல் விழாவை ஒவ்வொரு இல்லத்திலும் சிறப்பாக கொண்டாட‌ வேண்டும்.

தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை போற்ற வேண்டும். அதேபோல் திருவள்ளூர் தின விழாவையும் சிறப்பாக நடத்த வேண்டும். நமது முன்னோர்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறியுள்ளார்கள். இது உண்மைதான், ஒவ்வொருவர் வாழ்விலும் வளம், பொருளாதார வளர்ச்சி, மகிழ்ச்சி, மங்களம் செழிப்பு உள்ளிட்ட வளங்கம் பெருக வேண்டும். அதற்கு தை திருநாள் சிறப்பாக அமைய வேண்டும். தமிழர்கள் பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்