பெங்களூரு, ஜன. 15: பெங்களூரு அல்சூரில் புதன்கிழமை திருவள்ளுவர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜி.பரமேஸ்வர், தினேஷ்குண்டுராவ், எம்எல்ஏகள்ரிஸ்வான் அர்ஷத், சீனிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெங்களூரு அல்சூரில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே புதன்கிழமை (ஜன.15) ஆம் தேதி டாக்டர் பைப்பனஹள்ளி ரமேஷ் தலைமையில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

காலை 8 மணி முதல் திருக்குறள் முற்றோதல் அறமனை சீனிவாசன், மூர்த்தி இரா. ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிலைக்கு அமைச்சர்கள் ஜி. பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ், எம் பி, பி. சி. மோகன் எம்எல்ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், ஸ்ரீநிவாஸ், திரைப்பட நடிகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன், சப்தகிரி கௌடா, கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, அவைத்தலைவர் மொ.பெரியசாமி தட்சிணாமூர்த்தி, நாம்தேவ், உட்லண்ஸ் கணேசன், மகளிரணி அமைப்பாளர் சற்குணம், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் சம்பத், முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், கோபிநாத், முன்னாள் செயலாளர்கள் வா.ஸ்ரீதரன், ராமசுப்ரமணியன், அமுத பாண்டியன், சுரேஷ்குமார், ராஜசேகர், மா.நடராஜ், தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், திருவள்ளுவர் சங்கத்தின் தலைவருமான எஸ்.டி.குமார், ரகுதேவராஜ், வா.புகழேந்தி, சடகோபன், உரிமைக்குரல் எம்ஜிஆர் ரவி,

சத்குரு ஜெயபிரகாஷ் குருஜி, நந்தகுமார், விஸ்வநாதன், பாலகிருஷ்ணன், கிருஷ்ணன், ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் சரவணன், விஜயன், குணசேகர், சி.வி.ராமன் நகர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஆனந்தகுமார், கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.முத்துமணி, செந்தில்நாதன், ராஜசேகரன், கால்பந்து பயிற்சியாளர் குணசேகரன், ராஜகுரு, தேன்மொழியான் ரவி கோவலன், திருநாவுக்கரசு, திருமலை, சங்கர், கோபி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்வில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அவர்கள் மட்டுமின்றி, கர்நாடகத்தில் உள்ள அனைத்து மதத்தினர், மொழியினர் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டு, நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.தமிழர்கள் ஒன்று கூடவும், ஒன்றிணையவும் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்று தமிழர்கள் பரவலாக கேட்டுக்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய பைப்பனஹள்ளி ரமேஷ், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். வழக்கம் போல ஆண்டுதோறும் நடைபெறும் திருவள்ளுவர் தின விழா, நிகழாண்டும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மக்கள் இந்த ஆண்டு திரளாக வந்துள்ளதையடுத்து, அடுத்து ஆண்டு இதை விட சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளோம். நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் ஜி.பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ், எம்எல்ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், ஸ்ரீனிவாஸ், எம்.பி, பி.சி.மோகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்துள்ளனர் என்றார்.

எம்.பி, பி.சி.மோகன் பேசியது: 18 ஆண்டுகளாக அல்சூரு ஏரிக்கரையில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை மூடிக் கிடந்தது. அதனை அன்றைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழ்நாட்டின் முதல்வர் மு.கருணாநிதி ஆகியோரின் முயற்சியால் திறக்கப்பட்டது. அந்த சிலைக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி கூறியது: பைப்பனஹள்ளி ரமேஷ் தலைமையில் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மக்களும் திரளாக கலந்து கொண்டுள்ளனர். இந்த விழா நடத்துவதற்காக பைப்பனஹள்ளி ரமேஷை பாராட்டுகிறேன் என்றார்.

தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், திருவள்ளுவர் சங்கத்தின் தலைவருமான எஸ்.டி.குமார், திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழர்கள் பெருமளவில் திரண்டு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற தமிழர்கள் கட்சி வேறு பாடுடின்றி கர்நாடகத்தில் ஒன்று கூட வேண்டும். அப்படி ஒன்று கூடுவதன் மூலம்தான் தமிழர்களின் வாழ்வியல் இங்கு சிறக்கும். ஆகவே தமிழர்கள் இது போல தங்களது பங்களிப்பை தொடர்ந்து, ஒன்று கூடுதல் என்ற முறையில் இது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆர்.சுந்தரராஜன், விழாவில் கர்நாடகமும், தமிழ்நாடும் ஒன்று சேர்ந்தது போல் உள்ளது. நாமெல்லாம் திராவிட குடும்பம் ஆகிவிட்டோம். என்வே ஒன்று சேர்வது தான் முறை. மூடிக்கிடந்த சிலையை அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் மு.கருணாநிதியால் இந்த திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. கலைஞர் அவர்கள் இந்த சிலையை திறந்து வைத்தார்கள் என்றால், இங்குள்ளவர்களின் தொடர் போராட்டம்தான் காரணம். அவர்களின் போராட்டத்தால் கலைஞர் மு.கருணாநிதி முயற்சி எடுத்து இந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் என்பது சிறப்பு. அந்த திருவள்ளுவர் சிலை அருகே நடைபெறும் திருவள்ளுவர் தின விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
































































