முகப்பு Bengaluru திருவள்ளுவர் தின விழாவில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்: மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

திருவள்ளுவர் தின விழாவில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்: மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

97
0

பெங்களூரு, ஜன. 13: பெங்களூரு அல்சூரில் பைப்பனஹள்ளி டாக்டர் ரமேஷ் தலைமையில் நடைபெறும் திருவள்ளுவர் தின விழாவில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள திமுக அலுவலகம் கலைஞரக வளாகம்,தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு கரும்பு, வெல்லம், நெய், அரிசி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பும், நாட்காட்டியும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய இராமசாமி, தைத்திருநாளின் முதன் நாளை பொங்கல் விழாவாக தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம். அதன்படி மாநில திமுக சார்பில் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி, கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் தொகுப்பையும், நாட்காட்டியையும் வழங்கினோம்.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் எல்லா வளங்களையும், நலன்களை பெற்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வு சிறக்கவும், திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தவும் தைத்திங்கள் பொங்கல் நாளில் கேட்டுக் கொள்கிறேன்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். அவரின் கரத்தினை மேலும் வலிமை படைத்திட, கர்நாடக திமுக தொடர்ந்து பாடுபடும் என்றார்.

மேலும் ஜன. 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் பெங்களூரு அல்சூருவில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே பைப்பனஹள்ளி டாக்டர் ரமேஷ் தலைமையில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த விழாவில் நிகழாண்டும் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திருவள்ளுவர் தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலக மாந்தர்கள் அனைவருக்கும் சொந்தமானவர். எனவே விழாவில் யாரும் கட்சி, ஜாதி, மதம், மொழி பேதம் பார்க்காமல் கலந்து கொள்ள வேண்டும் என மாநில திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்