பெங்களூரு, டிச. 22: விஸ்வகவி திருவள்ளுவரை மொழி கடந்து கொண்டாட வேண்டும் என்று பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூர் ஏரிக்கரை அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில்
ஜன. 16 ஆம் தேதி நடைபெற உள்ள திருவள்ளுவர் நாளைகொண்டாடுவது குறித்து விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூர் ஏரிக்கரை அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில்
ஜன. 16 ஆம் தேதி நடைபெற உள்ள திருவள்ளுவர் நாளைகொண்டாடுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) மாலை 4 மணி அளவில் விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பையப்பனஹள்ளி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி, நடைபெற்றது.
இதில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கொ.தாமோதரன், மாநில திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ந.இராமசாமி, வா.ஸ்ரீதரன், கோபிநாத், விஸ்வநாதன், விஜயபூபதி, ராஜேந்திரன், சண்முகம், செந்தில்நாதன், விட்டல், திருநாவுக்கரசு, ராஜசேகர், புலவர் கார்த்தியாயினி, குணசேகர், ரவிபாபு, கோபி, சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைவரும் தங்களின் கருத்துகளை தெரிவித்த பின்னர், அதற்கு பதில் அளித்து டாக்டர் பைப்பனஹள்ளி டாக்டர் டி. ரமேஷ் பேசியது: விஸ்வகவி திருவள்ளுவர் தமிழில் திருக்குறளை வடித்து இருந்தாலும், அதனை ஜாதி, மதம், மொழி, நாடு கடந்து, உலக மாந்தர்கள் கடைபிடிக்க வேண்டிய, அனைத்து பண்புகள், மாண்புகள், மனிதநேயம் உள்பட அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளை போதித்துள்ளார்.
எனவே அவரை மொழிகடந்து, உலக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். குறிப்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கு, மலையாளம் உள்ளிட தென் மாநில மக்கள் மட்டுமின்றி, வட இந்திய சகோதரர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.
ஜன. 16ஆம் தேதி கொண்டாடப்படும் திருவள்ளுவர் நாளுக்கும் மாநிலம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிருந்தும் தமிழர்கள் மட்டுமின்றி, அனைவரும் திரண்டு வர வேண்டும்.
விழாவிற்கு கட்சி பேதமின்றி, சட்டமன்ற, நாடாளுமன்ற, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்படுவார்கள்.
முடிந்த அளவிற்கு விழாவிற்கு தேவையான நிதியையும் தரவும் மக்கள் முன் வரவேண்டும். தரும் நிதி, விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். விழா தொடர்பாக விரைவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும் என்றார்.






























































