முகப்பு Bengaluru தமிழன் அறிவில் என்றைக்கும் உயர்ந்து நிற்பான்: தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார்

தமிழன் அறிவில் என்றைக்கும் உயர்ந்து நிற்பான்: தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார்

115
0

பெங்களூரு, ஆக. 24: தமிழன் அறிவில் என்றைக்கும் உயர்ந்து நிற்பான் என்று தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.

பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலைக்கழத்தின் தமிழ்ச்சங்கத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த எஸ்.டி.குமார் பின்னர் பேசியது: தமிழர்களைப் பற்றி நாம் பழங்கதைகளை பேசிக் கொண்டிருப்பதாக கூறலாம். தமிழன் அன்றைக்கும், இன்றைக்கு இஸ்ரோவில் பணியாற்றி, விண்வெளியில் பல சாதனைகளை செய்து வருகின்றனர். தமிழன் அறிவில் என்றைக்கும் உயர்ந்து நிற்பான் என்பது இது போன்ற பல சாட்சிகள் உள்ளன.

தமிழ் வளர்ச்சிக்கு தமிழர்கள் மட்டுமின்றி, அயல்நாட்டில் இருந்து சமயப்பணி ஆற்ற வந்த பலர் தமிழ்ப்பணியை ஆற்றி உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ராபர்ட் கார்டுவெல் உள்ளிட்ட பலரை கூறலாம். தமிழ்தான் உலகில் முதல் தோன்றியது. தமிழில் இருந்துதான் பல மொழிகள் தோன்றின. தமிழில் அனைத்து வளங்களும் உள்ளன. சொல்வளம், பொருள்வளம், கட்டுக்கோப்பான இலங்கணம் உள்ளிட்டவைகளை எடுத்துக் கூறலாம்.

தமிழின் பெருமை பேசும் பல கல்வெட்டுகள் இன்றளவும் உள்ளன. அது புறியாமல் பல மரமண்டைகள் உள்ளன. தமிழனாக நாம் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு என்று பல சிறப்புகள் உள்ளன.தமிழனுக்கும் பல சிறப்புகள் உள்ளன. அதனை உலகிற்கு உணர்த்தும் வகையில் அக்டோபர் மாதத்தில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழர், கன்னடர் ஒற்றுமை, தமிழர் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் நோக்கில் இந்த மாநாட்டை முன்னெடுத்து செல்கிறோம். மாநாட்டில் தமிழின் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தமிழர்களே நாம் ஒன்றிணைவோம். தமிழர்களின் பலத்தை காட்டுவோம். அதில் இந்த கல்லூரியின் தமிழச்சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கல்லூரின் தமிழ்ச்சங்கத்தை தொடங்கி வைப்பதற்காக என்னை அழைத்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார். நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சரளா ஆறுமுகம், முத்துமணி நன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்