முகப்பு Education சிறந்த ஆளுமை வரும் போது பணிவு வர வேண்டும்: பேராசிரியர் கு.வணங்காமுடி

சிறந்த ஆளுமை வரும் போது பணிவு வர வேண்டும்: பேராசிரியர் கு.வணங்காமுடி

139
0

பெங்களூரு, ஆக. 24: சிறந்த ஆளுமை வரும் போது பணிவு வர வேண்டும் என்று முனைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி தெரிவித்தார்.

பெங்களூரு ஆர்பிஏஎன்எம்எஸ் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சிவகனி தலைமையில் சனிக்கிழமை முத்தமிழ் மன்றம் துவ‌க்கி வைக்கப்பட்டது. இதனை தொடக்கி வைத்து பேசிய முனைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி, கர்நாடகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆர்பிஏஎன்எம்எஸ் பள்ளி, கல்லூரி நிர்வாகிகளை பாராட்ட வேண்டும். இந்த மாநிலத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களின் ஆர்வத்தையும், பெற்றோர்களின் ஊக்கத்திற்கும் நன்றி பாராட்ட கடமை பட்டுள்ளேன். மாணவர்களை கல்வியை சிறப்பாக கற்றுக் கொண்டு ஆளுமையாக ஆகவேண்டும். அப்படி சிறந்த ஆளுமை வரும் போது பணிவு வர வேண்டும்.

செய்ய வேண்டியதை செய்யாமல் விடுவதும், செய்யக்கூடாததை செய்வதும் புத்திசாலிதனமன்று. எதையும், எவ்வளவு, எங்கே செய்ய வேண்டும் என்பது தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பெங்களூரில் பிறந்த தமிழர்கள், தங்கள் தாய்மொழியாம் தமிழை படிக்க முன் வர வேண்டும். சாதனை செய்தவர்கள் எல்லாம் தங்கள் தாய் மொழியில் பயின்றவர்கள் என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது. தாய்மொழியில் சிறந்து விளங்குபவர்கள், மற்ற மொழியிலும் சிறந்து விளங்க முடியும். தமிழர்கள் தங்களின் அடையாளத்தை, சிறப்பாக பணியாற்றுவதன் மூலம் நிரூபிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக பேசிய சிவகனி, பள்ளியின் முத்தமிழ் மன்றத்தின் நோக்கங்கள், தமிழை பள்ளியில் பாடமாக கற்கும் மாணவர்களுக்கு மட்டுமன்றி, அனைத்து மாணவர்களுக்கும் தமிழைக் கற்பிப்பது. திருக்குறள், மூதுரை, நல்வழி, நீதிநெறி விளக்கம் போன்ற பல இலக்கியங்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது. தமிழர்களின் கலைகளின் பெருமைகளை உணரச் செய்து, மாணவர்களுக்கு தமிழ்க் கலைகளை பயிற்றுவிப்பது. பாரம்பரிய தமிழ் விளையாட்டுகளை மாணவர்களுக்கு கற்றுத் தருவது. தற்காப்புக் கலைகளை பயிற்றுவிப்பது. தமிழ் விழாக்களைக் கொண்டாடுவது. பவ்வேறு பள்ளிகளை இணைத்துப் போட்டிகளை நடத்துவது. தமிழில் அதிக மதிப்பெண் பெறும். மாணவர்களை, பரிசுகள் அளித்து ஊக்குவிப்பது. மாணவர்களின் பெற்றோர்களையும், விழாக்கள், போட்டிகளில் பங்கேற்கச் செய்வது. கீழடி போன்ற தமிழர்களின் பெருமையை. பறை சாற்றும் இடங்களுக்கு மாண்வர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது உள்ளிட்டவையாகும் என்றார்.

நிகழ்ச்சியில் ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்சின் அறக்கட்டளை தலைவர் டாக்டர் நந்தகுமார், செயலாளர் சஞ்சீவ் நரேன், பொருளாளர் ஜெய் முகுந்தன், சிறப்பு விருந்தினர்கள்,முத்துமணி நன்னன், கார்த்தியாயினி, நிர்வாக அதிகாரி சூடாரத்னா, தலைமை ஆசிரியர்கள் கலையரசி, சாந்தி ஐயர், அமுதா, மாதவி, தமிழாசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிவப்பிரியா, சுஜாதா, சுமதி, சுப்புராஜ், பாரதி, கிரிஸ்டோபர் கவிதா, சுப்புலட்சுமி, . விஜயலட்சுமி, தகவல் தொழில் நுட்பத் துறைத் தலைவர் நளன், பள்ளியின் முன்னாள் மாணவர் வேலு பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்